ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

வேலை தேடுபவரா நீங்கள்..! 40,000 காலியிடங்கள் - தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

வேலை தேடுபவரா நீங்கள்..! 40,000 காலியிடங்கள் - தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

Mega Private Job Fair: 8ம் வகுப்பு., 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  Private Job Fair: சேலம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தும்  மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் 26ம் தேதி நடைபெற இருக்கிறது.

  40,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்:

  இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள் காப்பீடு,மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 40,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.

  காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8ம் வகுப்பு., 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

  இதையும் வாசிக்கஅரசு சுகாதார அலுவலகத்தில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

  இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு சேலம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

  இதையும் வாசிக்க சொந்த முயற்சியில் தரமான ரெஸ்யூம் தயார் செய்வது எப்படி?

  மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmailcom என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Fair, Private Jobs, Recruitment, Tamil Nadu Government Jobs