மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) 4,500-க்கு மேற்பட்ட குரூப் -சி பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாகியது. இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் பெரிய அளவில் இளைஞர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பதார்களுக்கு உதவும் வகையில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. SSC குருப்-சி தேர்வுகளுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், எஸ்.சி/எஸ்.டி 32 வயதிற்குள், இதர பிரிவினர் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 19.12.2022 அன்று காலை 11.00 மணியளவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களுக்கு 94990 55941 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
சேலம் மாவட்ட இளைஞர்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government jobs, Salem, SSC