ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

குரூப் 1 தேர்வர்களுக்கு குட்நியூஸ் - இலவச மாதிரி தேர்வில் நீங்களும் பங்கேற்கலாம்!

குரூப் 1 தேர்வர்களுக்கு குட்நியூஸ் - இலவச மாதிரி தேர்வில் நீங்களும் பங்கேற்கலாம்!

குரூப் 1 தேர்வு

குரூப் 1 தேர்வு

TNPSC Group 1 Model Exam: தேர்விற்கு விண்ணப்பித்த நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை கொண்டு வர வேண்டும். காலை 9.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தேர்வர்களுக்கு இலவச மாதிரித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து, அம்மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- I  பணிகளுக்கான தேர்வு வரும்  19 அன்று நடைபெற உள்ளது.  இதனை அடுத்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரித்தேர்வு வரும் 13 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

  இதையும் வாசிக்கவிருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்!

  TNPSC Group 1 Mock Test இடம் மற்றும் நேரம்: ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி (Vinayaka Missions Pharmacy College) வளாகத்தில் மாதிரித் தேர்வு நடைபெறும்.

  தேர்வு நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 100 மணி வரை

  தேர்விற்கு விண்ணப்பித்த நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை கொண்டு வர வேண்டும். காலை 9.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

  இதையும் வாசிக்க: இன்னும் 12 நாட்களில் TNPSC குரூப் 1 தேர்வு... இந்த கேள்விகள் கண்டிப்பா வரலாம்.. சில குறிப்புகள்!

  மாதிரித் தேர்வுகள் தொடர்பான விவரங்களை 94900 55941 என்ற அலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Tamil Nadu Government Jobs, TNPSC