ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை : விண்ணப்பிக்க சேலம் ஆட்சியர் அழைப்பு!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை : விண்ணப்பிக்க சேலம் ஆட்சியர் அழைப்பு!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை

Unemployment assistance Scheme Application Form: மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300/, மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு ரூ400/ மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600/- வீதம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அம்மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

10ம் வகுப்பு தோல்வி அல்லது 10ம் வகுப்பு  தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து  ஐந்தாண்டுகள் நிறைவடைந்த ( தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்) பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

இதையும் வாசிக்க: தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும்... மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை...

மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300/, மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு ரூ400/ மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600/- வீதம் காலாண்டிற்கு ஒருமுறை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/-, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/-மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000/- வீதம் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. மேலும், இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவார்கள்.

இதையும் வாசிக்க: சைக்கிள் ஓட்ட தெரியுமா? ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை

உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, 'சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்' விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள். வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் வந்து சமர்ப்பித்துப் பயன்பெறலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Unemployment