Home /News /employment /

Job Alert | ரூ.78,000 ஊதியத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு

Job Alert | ரூ.78,000 ஊதியத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை

Punjab Nation Bank Job | மொத்தம் 140 காலிப்பணியிடங்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி பணி நியமன நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    பஞ்சாப் நேஷனல் வங்கியில், மேலாளர் நிலையில் காலியாக உள்ள 145 பணியிடங்களுக்கு நியமனம் நடைபெற உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.pnbindia.in/ கிடைக்கும் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப நடவடிக்கைகள் ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்குகின்றன. உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மே 7ம் தேதி ஆகும்.

    காலிப்பணியிட விவரங்கள்: மொத்தம் 140 காலிப்பணியிடங்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி பணி நியமன நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதில் மேலாளர் (ரிஸ்க்) பிரிவில் 40 இடங்களும், மேலாளர் (கிரெடிட்) பிரிவில் 100 இடங்களும், மூத்த மேலாளர் பிரிவில் 5 இடங்களும் காலியாக உள்ளன.

    பணியிடங்களுக்கான தகுதிகள்: மேலாளர் (கிரெடிட்) - சார்டர்ட் அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா அல்லது காஸ்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் வழங்கும் சாட்டர்டு அக்கவுண்டண்ட் (சிஏ) சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும். பணி சார்ந்து ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனுடன் முழு நேர எம்பிஏ அல்லது பிஜிடிஎம் படிப்பு படித்திருக்க வேண்டும்.

    மேலாளர் (ரிஸ்க்) - சார்டர்ட் அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா அல்லது காஸ்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் வழங்கும் சாட்டர்டு அக்கவுண்டண்ட் (சிஏ) சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது அமெரிக்காவின் சிஎஃப்ஏ நிறுவனத்தில் சாட்டர்டு பினான்சியல் அனலிஸ்டு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    Also Read :  ரயில்வே துறையில் 147 காலிப்பணியிடங்கள்... ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

    பணி சார்ந்து ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனுடன் முழு நேர எம்பிஏ அல்லது பிஜிடிஎம் படிப்பு படித்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் புனேவின் என்ஐபிஎம் நிறுவனத்தில் வங்கி மற்றும் நிதி சேவைகளில் முதுநிலை டிப்ளமோ கல்வி முடித்திருக்க வேண்டும்.

    மூத்த மேலாளர் - இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 3 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். அத்துடன் மேலாளர் (ரிஸ்க்) பிரிவுக்கு உள்ள அதே கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

    வயது வரம்பு:

    மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 25 முதல் 35 வயதும், மூத்த மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 25 முதல் 37 வயதும் இருக்க வேண்டும்.

    விண்ணப்பம் செய்வது எப்படி?

    * பஞ்சாப் நேஷனல் வங்கியின் இணையதளத்திற்கு செல்லுங்கள்.
    ஹோம் பேஜ் பக்கத்தில் உள்ள அப்ளிகேஷன் லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
    *உங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    * விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
    * தேவையான ஆவணங்களை அப்லோடு செய்து, கட்டணம் செலுத்தவும்.
    * இந்த படிவத்தை சேவ் செய்து, டவுன்லோடு செய்து கொள்ளவும்.

    விண்ணப்பக் கட்டணம்:

    ஆன்லைன் விண்ணப்பத்துடன் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும். பொதுபிரிவினர் ரூ.850 செலுத்த வேண்டும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ரூ.50 செலுத்த வேண்டும்.

    தேர்வு முறை;

    ஆன்லைன் தேர்வு, அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு ஜூன் 12ம் தேதி நடைபெறும். ஆங்கில மொழித் தேர்வு, திறனறிதல் தேர்வு, தொழில்முறை அறிவுத்திறன் ஆகியவை சார்ந்து கேள்விகள் இருக்கும்.

    ஊதிய விவரம்:

    மேலாளர் (ரிஸ்க்) மற்றும் மேலாளர் (கிரெடிட்) பிரிவில் நியமனம் செய்யப்படுபவர்களுக்கு ரூ.4,81,170 முதல் ரூ.69,810 வரை ஊதியம் வழங்கப்படும். மூத்த மேலாளருக்கு (கருவூலம்) ரூ.63,840 முதல் ரூ.78,230 வரை ஊதியம் கிடைக்கும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Employment, Job, Punjab National Bank

    அடுத்த செய்தி