SAIL நிறுவனத்தில் 205 பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.4

இந்த 205 பணியிடங்களில் ஜூனியர் மேனேஜர் (சேஃப்டி) பணிக்கு 7 இடங்களும், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு 170 இடங்களும், பாய்லர் ஆபரேட்டர் பணிக்கு 28 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

news18
Updated: December 1, 2018, 8:30 PM IST
SAIL நிறுவனத்தில் 205 பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.4
செயில் நிறுவனத்தில் வேலைவய்ப்பு
news18
Updated: December 1, 2018, 8:30 PM IST
இந்திய உருக்கு ஆணைய நிறுவனத்தில் (SAIL) அதிகாரி மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் 205 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தின் சேலம் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் செயில் நிறுவனத்தின் கிளைகள் இயங்கி வருகின்றன. ஒடிஸா மாநிலம், ரூர்கேலாவிலுள்ள செயில் நிறுவன கிளையில் 205 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், ஜூனியர் மேனேஜர் (சேஃப்டி) பணிக்கு 7 இடங்களும், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு 170 இடங்களும், பாய்லர் ஆபரேட்டர் பணிக்கு 28 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு: 4-12-2018 நிலவரப்படி 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஜூனியர் மேனேஜர் மற்றும் பாய்லர் ஆபரேட்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 28 வயதுக்கு உட்பட்டவர்கள் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். படிப்புடன் முதுநிலை பட்டப்படிப்பு, டிப்ளமா படித்தவர்கள் ஜூனியர் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். டெக்னிஷியன் பணிக்கு விண்ணப்பிப்போர் கெமிக்கல், மெக்கானிக்கல், எல்க்ட்ரிக்கல், பவர் பிளான்ட், புரொடக்‌ஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமா என்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: ஜூனியர் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ. 500-ம், டெக்னீசியன் மற்றும் பாய்லர் ஆபரேட்டர் பணிக்களுக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ. 250-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி, பிரிவினர் மற்றும் முன்னாள் படை வீரர்கள் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

கடைசி தேதி: தகுதியானவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 4. மேலும் விவரங்களுக்கு www.sailcareers.com என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
Loading...
Also watch

First published: December 1, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...