முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / மாதம் ரூ.60,000 வரை சம்பளம்... இந்திய விளையாட்டு ஆணையம் காலியிடம் அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மாதம் ரூ.60,000 வரை சம்பளம்... இந்திய விளையாட்டு ஆணையம் காலியிடம் அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)

SAI Recruitment 2022 : விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் (வேறு எந்த முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது).

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) இளம் தொழில் வல்லுநர்களாக (தடகள உறவு மேலாளர்) பணியமர்த்த தகுதியான நபர் தேவை என அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்திய குடிமக்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். காலியிட தகவல்களுடன் கூடிய வேலை விளம்பரம் இந்தப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விவரங்களைப் பார்த்து, இறுதித் தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரங்கள் :

வாரியத்தின் பெயர்இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
பதவியின் பெயர்Young Professionals (Athlete Relation Manager)
காலியிடம்3 காலியிடங்கள் உள்ளது
விண்ணப்பிக்க கடைசி தேதி26/07/2022
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி11/07/2022
விண்ணப்பிக்கும் முறைonline

SAI வேலை காலியிடங்கள் :

குஜராத்தின் SAI NSWC காந்திநகரில் இப்போது 3 இளம் வல்லுநர்கள் (தடகள உறவு மேலாளர்) காலியிடங்கள் உள்ளன.

SAI ஆட்சேர்ப்பு தகுதி  :

ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டில் சான்றிதழ் / டிப்ளமோ படிப்புடன் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி பட்டம் பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

MBA or PGDM (02 Years) உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க விரும்பத்தக்கவர்கள்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

SAI ஆட்சேர்ப்பு வயது வரம்பு :

பதவிக்கான உயர் வயது வரம்பு 35 ஆண்டுகள்.

SAI தேர்வு செயல்முறை :

வாரியத்தால் நடத்தப்படும் நேர்காணலில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் அதிகாரி தேர்ந்தெடுக்கப்படுவார். நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும்.

SAI சம்பளம் :

நியமனம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளம் ரூ. 40,000 முதல் ரூ. 60,000 வரை.

அறிவிப்பு விவரம்

https://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1657545952_ADVERTISEMENT%20FOR%20THE%20POST%20OF%20YOUNG%20PROFESSIONALS%20(ARM).pdf

இந்த இணைப்பில் காணவும்.

இந்திய ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆட்சேர்ப்பு 2022க்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் : https://sportsauthorityofindia.nic.in/sai/
  • "Latest Update" நெடுவரிசையின் கீழ் "Jobs" என்பதை அழுத்தவும்
  • கிடைக்கும் வேலை அறிவிப்பைச் சரிபார்க்கவும்
  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் (வேறு எந்த முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது).
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 26-07-2022 (மாலை 5:00 மணி வரை).

First published:

Tags: Government jobs, Job Vacancy