Home /News /employment /

இந்திய விளையாட்டு ஆணையத்தில் 138 காலியிடங்கள்... ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் 138 காலியிடங்கள்... ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இந்திய விளையாட்டு ஆணையம்

இந்திய விளையாட்டு ஆணையம்

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் SAI யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும், கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்திய விளையாட்டு ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://saijobs.sportsauthorityofindia.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் உயர் செயல்திறன் ஆய்வாளர் (High-Performance Analyst) பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SAI ஆனது 138 காலியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் SAI யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும், கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் SAI ஆட்சேர்ப்பு 2022க்கு செப்டம்பர் 05க்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Graduate, Ph.D, Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் / அமைப்பின் பெயர்இந்திய விளையாட்டு ஆணையம்
    பதவிகளின் பெயர்High-Performance Analyst
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை138 காலியிடங்கள்
    வேலை வகைமத்திய அரசு வேலைகள்
    அறிவிப்பு வெளியான தேதி05/08/2022
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி05/09/2022
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    பணியிடம்இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.
    தேர்வு செய்யப்படும் முறை

    விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் அடிப்படையில்தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

     
    கல்வித் தகுதிவிண்ணப்பதாரர்கள் Graduate, Ph.D, Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ வாரியத்திலிருந்து அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
    வயது விவரம்05 செப்டம்பர் 2022 தேதியின்படி விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
    அதிகாரப்பூர்வ தளம்https://saijobs.sportsauthorityofindia.gov.in/

    அறிவிப்பினை காண இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

    https://sportsauthorityofindia.gov.in/sai/

    https://www.sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1659704670_FINAL%20ADVT%20HPA%205.8.2022.pdf

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

    விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை மிகவும் கவனமாக படிக்க வேண்டும். பின்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை அறிவிப்பில் காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி