• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை

SAI Recruitment 2021 : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதிய காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 08.11.2021

  • Share this:
    இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Authority of India, SAI) இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டினைப் பரப்பவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் 1984இல் நிறுவப்பட்ட மீயுயர் தேசிய விளையாட்டு அமைப்பாகும்.

    இதன்கீழ் பெங்களூரு, காந்திநகர், சண்டிகர், கொல்கத்தா, இம்பால், குவகாட்டி, போபால், இலக்னோ, சோனேபட் இடங்களில் அமைந்துள்ள ஒன்பது வட்டார மையங்களும் பாட்டியாலா, திருவனந்தபுரம் ஆகியவிடங்களில் அமைந்துள்ள இரண்டு விளையாட்டுத்துறை கல்வி நிறுவனங்களும் உள்ளன.

    பாட்டியாலாவிலுள்ள நிதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுக் கழகத்திலும் பெங்களூரு, கொல்கத்தா போன்ற சில வட்டார மையங்களிலும் பயிற்றுநருக்கான கல்வியும் விளையாட்டு மருந்தியல் கல்வியும் வழங்கப்படுகின்றன. திருவனந்தபுரத்திலுள்ள இலட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சிக் கல்லூரியில் உடற்பயிற்சிக் கல்வியில் பட்ட, பட்டமேற்படிப்பு கல்வித்திட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    தற்போது இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதிய காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Lead, Lead & Sports Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம் SAI
    வேலையின் பெயர் Senior Lead, Lead & Sports Associate
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 15 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம் Senior Lead பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
    தேர்வு செய்யப்படும் முறை Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் PGDM/ B.Tech/ MBA/ Master’s Degree என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,45,000/- வரை சம்பளம்
    பணியிடம்  இந்தியா முழுமையும் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 20.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 08.11.2021
    விண்ணப்ப முறை விண்ணப்பங்கள்

    இணையதள முகவரி https://sportsauthorityofindia.gov.in/sai/ இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1634556137_Personnel%20Recruitment%20TOPS%20and%20POD_13102021_Final.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்ப படிவம் பெற விண்ணப்பிக்க https://saijobs.sportsauthorityofindia.gov.in/SaijobsTOPS2021 இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: