ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழகத்தில் ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை... 8 ஆம் வகுப்பு படிப்பு போதும்

தமிழகத்தில் ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை... 8 ஆம் வகுப்பு படிப்பு போதும்

கன்டோன்மென்ட் போர்டு வெலிங்டன்

கன்டோன்மென்ட் போர்டு வெலிங்டன்

Central Govt job alert : மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தைக் கீழ் செயல்படும் கன்டோன்மென்ட் போர்டு வெலிங்டனில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தைக் கீழ் செயல்படும் தமிழக நீலகிரியில் உள்ள கன்டோன்மென்ட் போர்டு வெலிங்டன் அலுவலகத்தில் 8 ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளின் முழு விவரங்களை இங்குத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்பணியிடம்சம்பளம்கல்வித்தகுதி
  தூய்மை பணியாளர் (Safaiwala)4ரூ.15,700-50,000/-8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி

  எதிர்பார்க்கும் தகுதிகள்:

  தூய்மை பணி செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அலுவலகம் தமிழ்நாட்டில் உள்ளதால் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

  வயது வரம்பு:

  இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் வயது 21 முதல் அதிகப்படியான வயது 33 வரை இருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிக்குத் திறமை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  தேர்வு கட்டணம்:

  தூய்மை பணியாளர் திறமை தேர்வுக்காக ரூ.150/- கட்டணமாகச் செலுத்த வேண்டும். SC/ST/Widow/DAP/Transgender பிரிவினருக்குத் தேர்வு கட்டணம் கிடையாது. கட்டணத்தை IMPS/NEFT/RTGS போன்றவற்றை உபயோகப்படுத்தி ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

  பணம் செலுத்த வேண்டிய கணக்கு விவரம் :

  Name: The Chief Executive Officer, Account No: 38748594809,

  IFSC Code: SBIN0000828, Bank: State Bank of India,

  Branch: Coonoor

  Also Read : ரூ.2,50,000 வரை சம்பளத்தில் மத்திய அரசில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் Cantonment Board Wellington அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய : https://wellington.cantt.gov.in/recruitment/

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 02.12.2022 மாலை 5 மணி வரை.

  மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Jobs