ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ZOHO நிறுவனம் 2,000 பணியாளர்களை நியமிக்கத் திட்டம்

ZOHO நிறுவனம் 2,000 பணியாளர்களை நியமிக்கத் திட்டம்


ZOHO நிறுவனம்

ZOHO நிறுவனம்

ZOHO : பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் குறைந்தது 2,000 பணியாளர்களை நியமிக்க சென்னையை தளமாகக் கொண்ட Zoho Corp திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெருமளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நேரத்தில், Zoho நிறுவனம் ஊழியர்களைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் குறைந்தது 2,000 பணியாளர்களை நியமிக்க சென்னையை தலைமை மையமாகக் கொண்ட Zoho Corp திட்டமிட்டுள்ளது.

ZOHO நிறுவனம் மென்பொருள் உருவாக்குநர்கள், தர மதிப்பீட்டு பொறியாளர்கள், வலை உருவாக்குநர்கள், வடிவமைப்பாளர்கள், தயாரிப்பு சந்தைப்படுத்துபவர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப ஆதரவு பொறியாளர்கள் மற்றும் விற்பனை நிர்வாகிகளை (software developers, quality assessment engineers, web developers, designers, product marketers, writers, technical support engineers and sales executives) பணியமர்த்த உள்ளது.

இது குறித்து எக்கனாமிக் டைம்ஸிடம் பேசிய ஜோஹோவின் தயாரிப்புகள், வரி, கணக்கியல் மற்றும் ஊதியத் தலைவரான பிரசாந்த் காந்தி, திறமை இருக்கும் இடத்திற்கு நிறுவனங்கள் வாய்ப்புகளை எடுத்துக்கொண்டு திறமையை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய வேண்டும் என கூறியுள்ளார் . மேலும் ZOHO இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள திறமைகளைத் தட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான திறமையாளர்கள் கிராமங்கள் மற்றும் சிறு நகரத்தில் இருந்து வருகின்றனர். ஜோஹோ ஸ்கூல்ஸ் ஆஃப் லேர்னிங் போன்ற மேம்பாட்டுத் திட்டங்களை இந்த இடங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளது என கூறியுள்ளார்.

zoho
Zoho நிறுவனம்

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களுடன், ZOHO இந்தியா மற்றும் அமெரிக்கா முழுவதும் முன்னிலையில் உள்ளது மற்றும் அது சமீபத்தில் எகிப்து, ஜெட்டா மற்றும் கேப்டவுன் போன்ற சந்தைகளில் நுழைந்தது. இப்போது, ​​Zoho கிராமப்புற இந்தியாவில் உள்ள திறமைகளைத் தட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

First published:

Tags: Zoho