Job Alert : தினமும் ரூ.1000 சம்பளத்துடன் தமிழக அரசில் வேலை... விண்ணப்பிக்க விவரங்களை காண்க

தமிழக அரசில் வேலை

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி. 31.08.2021

  • Share this:
    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் குறைகேள் அதிகாரியாக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இத்துறை மக்களுக்கான அடிப்படை வசதிகள், சேவைகளைத் தவிர வறுமை நிவாரணத் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சுகாதாரம், அரசு ஊழியர்களின் திறன் மேம்படுத்தல், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாடு, சுனாமியினால் பாதிப்படைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு போன்ற பல சமூக நலத்திட்டங்களில் மைய அரசு மற்றும் மாநில அரசின் நிதி மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் (ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) ஆதரவு பெற்ற உதவித் திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பிலுள்ளத் துறையாகும்.

    இவை தவிரப் பல்வேறு ஊராட்சி நிறுவனங்கள் தன்னாட்சி அரசுப் பிரிவுகளாகத் திறனுடன் செயற்படுவதற்காக இத்துறையிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த துறையின் மூலம் கிராமத்தின் அடிப்படை வசிதிகளையும், தரமான சேவைகளையும் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாத மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இத்துறையின் கீழ் குறைகேள் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.











































    துறை

     

    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை


     

    பணி


    குறைகேள் அதிகாரி(Ombudsman)

    ( மக்களுக்கு அல்லது நுகர்வோருக்கு இருக்க கூடிய குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்ய முற்படும் அதிகாரி )
    வயது 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    சம்பள விவரம் நாள்தோறும் ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    அனுபவம் இந்த பணியில் சேர விரும்புவோர், 10 ஆண்டுகளாவது மக்கள் தொடர்புடைய பணிகளில் அனுபவ பெற்றிருக்க வேண்டும்.
    கல்வி தகுதி ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி Direct of Rural Devolpment and panjat raj, Saidapet, Panagal building, Chennai-600015
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி 31.08.2021


     

    வேலை வகை


    தமிழக அரசு வேலை

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.

    மேலும் விவரங்கள் அறிய www.tn.gov.in அல்லது www.tnrd.gov.in அல்லது

    என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://tnrd.gov.in/pdf/EOI31082021.pdf
    என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: