இந்திய ரயில்வே 11000+ பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு - 10 வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய ரயில்வே 11000+ பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு - 10 வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 11000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 11000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி தெற்கு மத்திய ரயில்வே , கிழக்கு ரயில்வே ,தென்மேற்கு ரயில்வே ,வடக்கு ரயில்வே என 11000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
மத்திய ரயில்வே துறை
வேலையின் பெயர்
Apprentice Posts
மொத்த காலி இடங்கள்
11000+
தேர்ந்தெடுக்கும் முறை
screening and scrutiny முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். எழுத்துத்தேர்வு கிடையாது
வயது
குறைந்தபட்ச வயது 15 மற்றும் அதிகபட்ச வயது 24
கல்வி தகுதி
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ITI படித்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
விண்ணப்ப முறை
Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
SC/ST - No fees
Others - ரூ.100/-
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள மொத்த காலியிட விவரங்கள் :
ஆர்ஆர்சி பெயர்
காலியிடங்களின் எண்ணிக்கை
விண்ணப்பிக்க கடைசி தேதி
தெற்கு மத்திய ரயில்வே
4103
03 நவம்பர்
கிழக்கு ரயில்வே
3366
03 நவம்பர்
தென்மேற்கு ரயில்வே
904
03 நவம்பர்
வடக்கு ரயில்வே
3093
20 அக்டோபர்
தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள 4103 காலிப் பணியிடங்களுக்கான விவரம் :
நிறுவனம்
தெற்கு மத்திய ரயில்வே
வேலையின் பெயர்
வெல்டர், எலக்ட்ரீஷியன், தச்சன் மற்றும் பிற
அறிவிப்பு எண்
RRC-SCR/Act Apprentices/2020-21
காலிப்பணி இடங்கள்
4103
பணியிடம்
Secunderabad
தேர்ந்தெடுக்கும் முறை
Academic Qualification
Interview
வயது
15 – 24
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
04.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி
03.11.2021
விண்ணப்ப முறை
Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கிழக்கு மத்திய ரயில்வே காலிப் பணியிடங்களுக்கான விவரம் :
கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் Apprentice பணிகளுக்கு என மொத்தமாக 3366 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்க்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 04.10.2021 அன்று முதல் 03.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மொத்தம் 3366 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
ECR, Railway
விளம்பர எண்
RRC-ER/Act Apprentices/2020-21
வேலையின் பெயர்
Apprentice
காலிப்பணி இடங்கள்
3366 காலியிடங்கள்
தேர்ந்தெடுக்கும் முறை
ITI மதிப்பெண்களின் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
வயது
குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
04.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி
03.11.2021
விண்ணப்ப முறை
ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி தகுதி
10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி
ITI பாடங்களில் தேர்ச்சி அல்லது NCVT/ SCVT சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இதேபோன்று வடக்கு ரயில்வே (3093 காலியிடங்கள் )மற்றும் தென்மேற்கு ரயில்வே (904 காலியிடங்கள் ) உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி வயது உள்ளிட்டவை மேற்குறிப்பிட்ட பணியிடங்களில் குறிப்பிடப்பட்டுளளவை தான் வடக்கு ரயில்வே மற்றும் தென்மேற்கு ரயில்வே வேலைகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வடக்கு ரயில்வே (3093 காலியிடங்கள் ) அறிவிப்பு விவரம்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
விண்ணப்பப் படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.
உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.