Home /News /employment /

RRB NTPC CBAT Exam: வரும் 30ம் தேதி கணினித் திறனறிவு தேர்வு தேதி: ரயில்வே வாரியம் அறிவிப்பு

RRB NTPC CBAT Exam: வரும் 30ம் தேதி கணினித் திறனறிவு தேர்வு தேதி: ரயில்வே வாரியம் அறிவிப்பு

காட்சிப்படம்

காட்சிப்படம்

நிலை 6, 4 பிரிவுகளுக்கு அடுத்தக் கட்டமாக கணினித் திறனறிவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உள்ளன.

    நிலை 6, 4 பிரிவுகளுக்கு மூன்றாவது கட்ட கணினித் திறனறிவு தேர்வு தேதியை இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துளளது.  வரும் 30ம் தேதி நடைபெறும் இந்த தேர்வுக்கு இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்திய ரயில்வே துறையின் பல பிரிவுகளில் 1.4 லட்சம் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை முன்னதாக ரயில்வே வாரியம் வெளியிட்டது. CEN 03/2019 (Ministerial & Isolated Categories) ஆட்சேர்ப்புக்கான தேர்வு முதற்கட்டமாகவும், CEN 01/2019 (NTPC categories) ஆட்சேர்ப்புக்கான தேர்வு இரண்டாவது கட்டமாகவும், CEN No. RRC- 01/2019 ஆட்சேர்ப்புக்கான தேர்வு மூன்றாவது கட்டமாகவும் நடைபெற்றது.

    இதில், தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளில் (CEN 01/2019 (NTPC categories)  2,3,4,5,6 என்ற சம்பள நிலைக்கேற்ப தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து நிலைகளுக்கும் ஒரே கட்டமாக முதற்கட்ட தேர்வு கணினி வழியில் நடைபெற்றது.

    இதையும் வாசிக்க CTET 2022: டிசம்பரில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு : சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    இதில் நிலை 6, 4 பணிகளுக்கான இரண்டாவது நிலை எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நாடு முழுவதும் 25 மாநிலங்களில் உள்ள 111 நகரங்களில் அமைந்துள்ள 156 மையங்களில் நிலை 6 தேர்வு நடத்தப்பட்டது. அதே போன்று, 17 மாநிலங்களில் உள்ள 56 நகரங்களில் அமைந்துள்ள 89 மையங்களில் நிலை 4 தேர்வு நடத்தப்பட்டது. கணினி அடிப்படையில் நடத்தப்பட்ட இத்தேர்வுகளில், ஒட்டுமொத்தமாக, 1,28,708 விண்ணப்பதாரர்கள் தேர்வெழுதினர்.  ரயில் நிலைய அதிகாரி (Station Masters) பதவிக்கான நிலை 6-ல் 7124 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதே போன்று, போக்குவரத்து உதவியாளர் பதவிக்கான நிலை 4-ல் 161 இடங்கள் உள்ளன.

    இதையும் வாசிக்க:  தற்கொலை என்பது தீர்வு ஆகாது: 'நீட்' தேர்வர்களுக்கு வைகோ வேண்டுகோள்

    இந்த இரண்டாவது நிலை எழுத்துத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியாகியது. இதில், மொத்தமாக 57,117 தேர்வர்கள் கணினி திறனறிவு தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில், 4000க்கும் மேற்பட்ட பெண் தேர்வர்களும் அடங்கும்.

    நிலை 6, 4 பிரிவுகளுக்கு அடுத்தக் கட்டமாக கணினித் திறனறிவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உள்ளன. இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், கணினி திறனறிவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

    NOTICE ON DATE OF COMPUTER BASED APTITUDE TEST (CBAT)
    Published by:Salanraj R
    First published:

    Tags: Indian Railways

    அடுத்த செய்தி