Home /News /employment /

ரயில்வே தேர்வு: பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் வழங்கப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி

ரயில்வே தேர்வு: பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் வழங்கப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி

ரயில்வே வேலைவாய்ப்பு

ரயில்வே வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து தேர்வர்களுக்கும் இத்தகைய நெருக்கடியான சூழல் காணப்படுகிறது.

    தொழில்நுட்பம் சாராத சாதாரண பணியிடங்களுக்கு (NTPC) கணினி வழியில் நடத்தப்படும் இரண்டாம் நிலை தேர்வின் (CBT-1) மையங்கள் குறித்த விபரத்தை (Exam City Slip) ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 



    இரண்டாம் நிலைத் தேர்வு வரும் மே மாதம் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தேர்வு மையச் சீட்டினை பதிவிறக்கம் செய்த தேர்வர்கள், தங்களுக்கான தேர்வு மையங்கள் மிகத் தொலைவில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உதாரணமாக, தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பம் செய்த  தேர்வர் ஒருவருக்கு, கர்நாடகா மாநிலம் உடுப்பியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.



    நாடு முழுவதும் உள்ள அனைத்து தேர்வர்களுக்கும்  இத்தகைய நெருக்கடியான சூழல் காணப்படுகிறது. மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர் ஒருவருக்கு மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.  அதேபோன்று, பீகாரில் உள்ள மாணவர் ஒருவருக்கு அசாமில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

     





    தொலைவில் உள்ள இடங்களுக்குத் தேர்வு எழுதச் செல்வதற்கான போக்குவரத்து மற்றும் தங்கும் இட வசதிகளை செய்து கொள்வதற்கு பெண் விண்ணப்பதாரர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். தொலைவில் உள்ள மையங்களுக்குச் செல்வதற்கு, துணைக்கு ஒரு நபரை அவர்கள் தேட வேண்டியுள்ளது என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

    எனவே , தேர்வு எழுவுதுவதற்கான ஏற்றச் சூழலை அளிக்க வேண்டும் என்று  விண்ணப்பதாரர்கள் மத்திய ரயில்வே அமைச்சருக்கு தொடர்ந்து  கோரிக்கை  வைத்து வருகின்றனர்.

    தேர்வர்கள், https://www.rrbcdg.gov.in/index-hindi.php என்ற  இணைய தளம் வாயிலாக அனுமதிச் சான்றிதழ்களைத் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இணைய வழி விண்ணப்பங்களில் செல்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி அளித்திருந்தால் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமும் விவரங்கள் அனுப்பப்படும்.   
    Published by:Salanraj R
    First published:

    Tags: Indian Railways

    அடுத்த செய்தி