RRB NTPC 2nd Stage Computer Based Test: இந்திய ரயில்வே வாரியத்தின் (நான் டெக்னிக்கல் பாப்புலர் கேட்டகரிஸ் – கிராஜூவேட் & அன்டர் கிராஜூவேட்) இரண்டாம் கட்ட தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புவனேஸ்வர், பிலாஸ்பூர், சண்டிகர், கோரக்பூர், மும்பை, முசாபர்பூர், ராஞ்சி, செகந்திராபாத் ஆகிய இடங்களில் 5ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 12ம் தேதியும், 2ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 13ம் தேதியும், 3ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 14ம் தேதியும் தேர்வு நடைபெற உள்ளது.
அதேபோன்று, அஜ்மீர், போபால், சென்னை, குவகாத்தி, பாட்னா, பெங்களூர், ஜம்மு-ஸ்ரீநகர், கொல்கத்தா, சிலிகுரி, அகமதாபாத், அலகாபாத், மால்டா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 15ம் தேதியும், 2ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 16ம் தேதியும், 3ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 17ம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளது.
22 மத்திய பல்கலைக்கழகங்கள் CUET - PG தேர்வை ஏற்க மறுத்துள்ளன
விண்ணப்பதாரர்கள், தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்கள் முன்பாக இருந்து, www.rrbcdg.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திலிருந்து தேர்வு அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், ஆன்லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படும்.
2022 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு எப்போது?
CEN 01/2019 (தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகள்) ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒரே கட்டமாக முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இரண்டாம் நிலை தேர்வு ஒவ்வொரு சம்பள பிரிவுக்கும் (நிலை 2,3,4,5,6) தனித்தனியே கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு நடைபெறும். அதன்படி, ஒவ்வொரு சம்பள பிரிவுக்கும், விண்ணப்பதார்கள் ஒரே ஷிப்ட்-ல் இடம் பெறும் வகையில் தேர்வு நடைபெறுகிறது. இரண்டாம் நிலையின் பல பதவிகளுக்கு தேர்வெழுத விரும்பும் விண்ணப்பித்தார்கள், அந்தந்த தேர்வுகளுக்கு தனித்தனியே தோன்ற வேண்டும். எனவே, ரயில்வே வாரியம் அளித்த இடைவெளியைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.