ஆர்.பி.எஃப்-இல் 798 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன. 30

விண்ணப்பதாரர்கள் 1-1-2019 நிலவரப்படி 18 வயது முதல் 25  வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

news18
Updated: January 26, 2019, 3:28 PM IST
ஆர்.பி.எஃப்-இல் 798 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன. 30
மாதிரிப் படம்
news18
Updated: January 26, 2019, 3:28 PM IST
ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்.பி.எஃப்) 798 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி ஜனவரி 30.

ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை ஆகிய இரு பிரிவுகளிலும் 798 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் கான்ஸ்டபிள் (வாட்டர் கேரியர்) பணியின் கீழ் 452 இடங்களும், கான்ஸ்டபிள் (சஃபாய்வாலா) பணியின் கீழ் 199 இடங்களும் காலியாக உள்ளன. சலவையாளர், முடி திருத்துநர் உள்ளிட்ட பணிகளுக்கு பிற இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-1-2019 நிலவரப்படி 18 வயது முதல் 25  வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ. 500-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் ரூ. 400 கணினித் தேர்வின்போது திரும்ப வழங்கப்படும். எஸ்.சி., எஸ்.டி, பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், அனைத்துப் பிரிவு பெண்கள் ரூ. 250-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கணினித் தேர்வின்போது திரும்ப வழங்கப்படும்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 30. மேலும் விவரங்களுக்கு, http://indianrailways.gov.in, https://www.tcyonline.com/tcyinfo/pdf/rpf-constable.pdf ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Loading...

Also watch

First published: January 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...