ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூர்கேலா உருக்கு ஆலையில் 300க்கும் மேற்பட்ட காலியிடங்கள்: டிப்ளமோ மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு

ரூர்கேலா உருக்கு ஆலையில் 300க்கும் மேற்பட்ட காலியிடங்கள்: டிப்ளமோ மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

துணை மேலாளர் (பாதுகாப்பு) நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தொடர்புடைய துறைகளில் பிஇ.,பிடெக் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நிர்வாகம் மற்றும் அதிகாரம் சாராத நிர்வாக அதிகாரி  பணிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை  இந்திய உருக்கு ஆணையத்தின் (SAIL) ரூர்கேலா  உருக்கு தயாரிக்கும் ஆலையம் (Rourkela Steel plant) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

  காலிப்பணியிடங்கள்: 300-க்கும் மேற்பட்ட இடங்கள்

    

  விண்ணப்பிப்பது எப்படி?

  இந்திய உருக்கு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் sailcareers.com மூலம் மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும்.

  கல்வித் தகுதி: துணை மேலாளர் (பாதுகாப்பு) நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தொடர்புடைய துறைகளில் பிஇ.,பிடெக் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழிற்சாலை பாதுகாப்பு பணியில் இரண்டாண்டுகால அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  இதர பதவிகளுக்கு விண்ணப்பிக்கு விரும்புவோர், 10ம் வகுப்புடன் தொடர்புடைய துறைகளில் மூன்றாண்டு கால பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். Mining Mate, Attendant-cumTechnician பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்புத் தேர்ச்சியிடன் தொடர்புடைய துறைகளில் தொழிற்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

  ஊதியம்: உதவி மேலாளர் பதவிக்கு மாதச் சம்பள முறை ரூ.50,000 முதல் 1,60, 0000 வரை இருக்கும். இதர பணிகளுக்கான சம்பள விவரங்கள் ஆள் சேர்ப்பு அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

  விண்ணப்பக் கட்டணம்: துணை மேலாளர் (பாதுகாப்பு) பதவிக்கு ரூ.700-ம் , Mining Mate, Attendant-cum-Technician (Trainee) பதவிக்கு ரூ.100-ம், இதர பதவிகளுக்கு ரூ. 500-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இடஒதுக்கீடு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் சலுகை உள்ளது.

  தெரிவு முறை: கணினி அடிப்படையிலான தேர்வில் (பொது அறிவு/தொழில் அறிவு  சோதனை) தேர்ச்சி பெற வேண்டும்.  

  இதையும் வாசிக்கதமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு ஒத்திவைப்பு

  இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வரும் 30ம் தேதியே கடைசி நாள் என்பதால், விண்ணப்பத்தார்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  Rourkela Steel Plant (RSP) Executive and Non Executive Post

  Published by:Salanraj R
  First published: