Home /News /employment /

இந்தாண்டு டிஜிட்டல் சார்ந்த பணிகளுக்கு வாய்ப்பு அதிகரிப்பு - சர்வேயில் வெளியான தகவல்!

இந்தாண்டு டிஜிட்டல் சார்ந்த பணிகளுக்கு வாய்ப்பு அதிகரிப்பு - சர்வேயில் வெளியான தகவல்!

காட்சி படம்

காட்சி படம்

ஆய்வில் சுமார் 62% நிறுவனங்கள் வரும் ஜூன் மாதத்திற்குள் தங்கள் நிறுவனங்களின் பணியமர்த்தல் தொற்றுக்கு முந்தைய நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாக கூறி இருக்கிறார்கள்.

டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த திறன்களுக்கான தேவை ஆகியவை, நடப்பாண்டில் அதிக பணியாளர்கள் வேலைகளில் பணியமர்த்தப்படும் வாய்ப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும் என்று கணக்கெடுப்பு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.

ஏப்ரல்-ஜூன் 2022 காலாண்டிற்கான பணியமர்த்தல் அவுட்லுக் முந்தைய ஜனவரி-மார்ச் 2022 காலாண்டில் இருந்து காலாண்டு அடிப்படையில் சுமார் 4% புள்ளிகள் அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், வணிக மேம்பாடு மற்றும் மார்க்கெட்டிங் போன்ற துறைகள் இனி வரும் மாதங்களில் தகுதி வாய்ந்த மற்றும் திறமையானவர்களை பணியமர்த்த வாய்ப்பு உள்ளது. மேற்காணும் மூன்று துறைகள் முறையே 59%, 43% மற்றும் 36% பணியாளர்களை புதிதாக பணியமர்த்த இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பணியமர்த்தல் நடைமுறையில் 5-8 ஆண்டுகள்பணி அனுபவமுள்ளவர்கள் 53 சதவீதம், 3-5 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் 67 சதவீதம், அதை தொடர்ந்து 1-3 ஆண்டுகள் பணி அனுபவமுள்ளவர்கள் 53% சதவீதமாவும் இருக்கும் என்று குறிப்பிடுகின்றன. சமீபத்திய Naukri Hiring Outlook-ன் படி நாடு முழுவதும் காலண்டர் ஆண்டின் முதல் பாதியில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை பணி அமர்த்த உள்ளன.

இது தொடர்பாக Naukri ஹைரிங் அவுட்லுக் சர்வே 2022-ல் வெளியாகி இருக்கும் தகவலின் படி கடந்த 2021 ஜூலையில் 51% நிறுவனங்கள் புதிய மற்றும் மாற்று பணியமர்த்தல் அதாவது ரீபிளேஸ்மென்ட் செய்திருப்பதாக கூறி இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நடப்பாண்டில் 57% -ஆக உயரும் என்று தெரிகிறது. விரிவான ஆன்லைன் கேள்வித்தாளை பயன்படுத்தி 10 முக்கிய துறைகளை சேர்ந்த 1,879 நிறுவனங்கள் மற்றும் ஆலோசகர்களை Naukri Hiring Outlook-ன் சர்வே ஆய்வு செய்தது.

ஆய்வில் சுமார் 62% நிறுவனங்கள் வரும் ஜூன் மாதத்திற்குள் தங்கள் நிறுவனங்களின் பணியமர்த்தல் தொற்றுக்கு முந்தைய நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாக கூறி இருக்கிறார்கள். மேலும் ஆய்வில் சுமார் 57% நிறுவனங்கள் புதிய மற்றும் மாற்று பணியமர்த்தல்கள் தங்கள் நிறுவனங்களில் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

also read : யூஸர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றுகிறதா Twitter நிறுவனம்? - வைரலான ட்வீட்!

சம்பள உயர்வு:

கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பதில் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு சர்வேயின் போது ஊழியர்களுக்கு இன்கிரிமென்ட் கொடுக்க போவதாக சொன்ன நிறுவனங்களின் எண்ணிக்கையை விட, இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையும் அதிகம் கொடுப்பதாக கூறும் சம்பள உயர்வின் சதவீதமும் அதிகமாக உள்ளதை இந்த சர்வே வெளிப்படுத்தி உள்ளது.

கேம்பஸ் ஹைரிங்:

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டு கேம்பஸ் இன்டர்வியூ இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் கேம்பஸ் ஹைரிங் ஹிட்டமைத்தபடி நடக்கும் என்று எதிர்பார்க்கின்றன. சர்வேயில் பங்கேற்ற சுமார் 47% நிறுவனங்கள் கேம்பஸ் வேலை வாய்ப்புகளை உறுதி செய்துள்ளன.

also read : ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டாவை அழித்து ஃபேக்ட்ரி ரீசெட் செய்ய வேண்டுமா? இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்

பணியிட மாடல்களில் மாற்றம்:

சுமார் 41% இந்திய நிறுவனங்கள் பணியாளர்களுடன் அலுவலக வேலை முறைக்கு திரும்பத் தயாராகி வருகின்றன. கடந்த ஜூலை 2021 கணக்கெடுப்பின் போது இது 10%-ஆக இருந்தது. 42% நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் கூட ஓகே தான் என்கின்றன. அதே நேரத்தில் 14% நிறுவனங்கள் நேரடி அலுவலக வேலை மற்றும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் கலவை ஊழியர்களுடன் அலுவல்களை நடத்த உள்ளதாக கூறி உள்ளன.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Employment

அடுத்த செய்தி