COVID-19 Recruitment : திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்,செவிலியர் தேவை - வேலைக்கு விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

மருத்துவர்,செவிலியர் தேவை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியாற்றுவதற்காக கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

  • Share this:
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை,11 அரசு மருத்துவமனைகள், 3 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 22 இடங்களில் கோவிட்-19 கொரோனா பராமரிப்பு மையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மூலம் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியாற்றுவதற்காக கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.































    நிறுவனம் திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனை
    காலிப்பணியிடங்கள் மருத்துவர் , செவிலியர் , ஆய்வக நுட்புநர் , நுண்கதிர் இயக்க நுட்புநர் , பல்நோக்கு மருத்துவ பணியாளர்
    பணியிடம் திருவண்ணாமலை
    தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 14/05/2021
    கல்வி தகுதி மருத்துவர்  - MBBSமருத்துவர்  - MBBSசெவிலியர் - DGNM/B.SC Nursing ஆய்வக நுட்புநர் - DMLTநுண்கதிர் இயக்க நுட்புநர் - Diploma in X-ray Technologyபல்நோக்கு மருத்துவ பணியாளர் - 10th
    சம்பள விவரம் மருத்துவர் - ரூ.60,000
    செவிலியர் - ரூ.10,000
    ஆய்வக நுட்புநர் - ரூ.8,000
    நுண்கதிர் இயக்க நுட்புநர் - ரூ.8,000
    பல்நோக்கு மருத்துவ பணியாளர் - ரூ.6,000

    இப்பணியிடங்களுக்கான நேர்காணல் 17.05.2021 திங்கட்கிழமை மற்றும் 18.05.2021 செவ்வாய் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றது. இநேர்காணலுக்கு வருபவர்கள் பயோ டேட்டா , கல்விச் சான்றிதழ், அடையாள அட்டை , பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வர வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது. நேர்காணல் நடைபெறும் இடங்கள்

    1. துணை இயக்குனர் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை, செங்கம் சாலை, திருவண்ணாமலை

    2. துணை இயக்குனர் அலுவலகம், செய்யாறு

    3. மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், எஸ்.வி நகரம்,ஆரணி

    மேலும் விவரங்களுக்கு 04175-1077,04175-233344,04175-233345 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார்.

    வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    Published by:Sankaravadivoo G
    First published: