இந்திய ராணுவ சிப்பாய் பிரிவில் முதல் முறையாகப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு!

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும்.

இந்திய ராணுவ சிப்பாய் பிரிவில் முதல் முறையாகப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு!
இந்திய ராணுவம்
  • News18
  • Last Updated: April 25, 2019, 8:30 PM IST
  • Share this:
இந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களை ராணுவ போலிஸ் பதவிக்கு பணிக்கு எடுப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதல் முறையாக இந்திய ராணுவத்தில் பெண்களை இராணுவ போலிஸ் படைக்கு எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும்.

பெண்கள், இந்திய ராணுவ பணிகளில் இதுவரை இருந்திருந்தாலும் சிப்பாய் பணிகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் முதல் முறையாகச் சிப்பாய் பணிக்கு 2019 ஏப்ரல் 29 தொடங்கி 2019 ஜூன் 8-ம் தேதிக்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு தரவுகளின் படி விமானப்படை மற்றும் கப்பற் படையில் 13.09 சதவீதம் பெண்களும் பணியில் உள்ளனர்.

இந்திய ராணுவத்தின் இந்த அறிவிப்பை அடுத்து ராணுவத்தில் பெண்கள் பணிக்கு சேர்வது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க:
First published: April 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்