தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வள வல்லுநர் (பண்ணை சார் தொழில்) பணியிடங்களுக்கு முன் அனுபவத்தின் அடிப்படையில் மதிப்பூதியம் வழங்கும் வகையில் 15 நாட்களுக்கு பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் |
மாவட்ட வள வல்லுநர்(பண்ணை சார் தொழில்) | 1 |
சம்பள விவரம்:
10 வருட அனுபவம் கொண்டவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.3,500
6 வருட அனுபவம் கொண்டவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500
2 வருடம் முதல் 6 வருட வரை அனுபவம் கொண்டவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,000
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
Agriculture/Veterinary Science/ Horticulture பாடங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Business Adminsistration in Supply Chanin Management பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்:
சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 வருடம் மற்றும் அதிகபட்சம் 10 வருடங்கள் அனுபவம் தேவை.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று கொடுக்கலாம்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : விண்ணப்பம்
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இணை இயக்குநர்/திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
இரண்டாவது தளம், கோரம்பள்ளம் - 628101,
தூத்துக்குடி மாவட்டம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.01.2023 மாலை 5.45 மணி வரை.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job, Tamil Nadu Government Jobs