ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஓஎன்ஜிசி 922 காலியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

ஓஎன்ஜிசி 922 காலியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆர்வமுள்ளவர்கள் இன்றிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.   

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய எண்ணெய் கழகத்தில் (ONGC) அதிகாரம் சாரா (Non-Executive Officer) பதவிக்கான விண்ணப்ப செயல்முறை இன்றுடன் முடிவடைகிறது. ஆர்வமுள்ளவர்கள் இன்றிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 992; சென்னை மற்றும் புதுச்சேரியில் 38 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை அறிவதற்கான இணையதளம் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/76282/Instruction.html

வயது வரம்பு: Drilling/Cementing/Production - Drilling தவிர இதர F1 மற்றும் A1 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 28.05.2022 அன்று 30-க்கு கீழ் இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும். W1 நிலை பதவிகளுக்கு வயது வரம்பு 18-27 ஆகா இருக்க வேண்டும். இளநிலை கனரக வாகன இயந்திர செய்குநர் பதவிக்கு வயது வரம்பு 18-35 ஆக இருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.300ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை.

கணினி சார்ந்த பொது அறிவித் தேர்வு மற்றும் இன்னும் பிற நிபந்தனைகள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார்செய்யப்படும்.

முழு விபரங்களை தெரிந்து கொள்ள இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்

விண்ணப்பிக்க INSTRUCTIONS FOR SUBMISSION OF ON-LINE APPLICATION

First published:

Tags: ONGC