தமிழக காவல்துறையில் 10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு: எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 10,906 இரண்டாம் நிலை காவலர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழக காவல்துறையில் 10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு: எப்படி விண்ணப்பிக்கலாம்?
கோப்புப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2020, 3:44 PM IST
  • Share this:
தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளதாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு www.tnusrbonline.org எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்டோபர் 26ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான எழுத்துத்தேர்வு டிசம்பர் 13-ல் நடைபெறும். இந்த எழுத்துத்தேர்வு மாவட்டவாரியாக நடக்கும். மொத்த எழுத்துத்தேர்வு 1.20 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு பின்னர் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


மேலும் படிக்க... ஆண்ட்ராய்ட் மொபைல் இல்லாத மாணவர்களே இல்லை - அண்ணா பல்கலை ஆய்வில் தகவல்



மேலும் விபரங்களுக்கும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வது, பூர்த்தி செய்வது பதிவேற்றம் செய்யும் தேதி, விண்ணப்பிக்க இறுதி தேதி, தேர்வு தேதி, வயது வரம்பு, தகுதி போன்ற விரிவான தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading