ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

12-ம் வகுப்பு முதல் டிகிரி வரை... ரயில்வேயில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு!

12-ம் வகுப்பு முதல் டிகிரி வரை... ரயில்வேயில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு!

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே

Railways jobs : இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு அலுவலகம் விளையாட்டு கோட்டாவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியன் ரயில்வேயில் உள்ள பணியிடங்களை நிரப்பும் ரயில்வே வேலைவாய்ப்பு அலுவலகம் தென் கிழக்கு மத்திய ரயில்வே பிலஸ்பூரில் உள்ள நிலை 5, 4, 3 மற்றும் 2 காலிப்பணியிடங்களை விளையாட்டு கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.  பல வகையான விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு பெரும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பணி நிலைகள்பணியிடங்கள்சம்பளம்
’பிரிவு - சி’நிலை 5 /நிலை 45ரூ.29,200-92,300/- அல்லது ரூ.25,500-81,100/-
’பிரிவு - சி’நிலை 2 /நிலை 316ரூ.21,700-69,100/- அல்லது ரூ.19,900-63,200/-

விளையாட்டு பிரிவுகள் :

குத்துச்சண்டை, கைப்பந்து, கோ-கோ, குண்டு எரித்தல், கூடைப்பந்து, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், ஈட்டி எரித்தல், கிராஸ் கண்டிரி மற்றும் எடை தூக்குதல்.

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 இல் இருந்து 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

பணிதகுதி
நிலை 5 சம்பளப் பணிஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
நிலை 4 சம்பளப் பணிபட்டப்படிப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு சான்றிதழ்.
நிலை 2 மற்றும் நிலை 3 சம்பளப் பணி12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்கள் ட்ரயல் தேர்வு மற்றும் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் செய்த சாதனை போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Also Read : ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி.. ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை:

இந்தியன் ரயில்வே பணியில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் இப்பணிகளுக்கு https://secr.indianrailways.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பு தேவையான தகுதி மற்றும் விதிமுறைகளை முறையே படித்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://nitplrrc.com/RRC_BSP_SPRT2022/

முக்கிய நாட்கள் :

நிகழ்வுகள்தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கிய நாள் 26.11.2022
ஆன்லைனில் விண்ணப்பம் முடியும் நாள்25.12.2022
திறன் தேர்வு நடைபெறும் மாதம்டிசம்பர் 22 அல்லது ஜனவரி 2023

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Indian Railways, Jobs, Railway Jobs