மத்திய அரசின் தேசிய காப்பகம் கலாச்சாரம் அமைச்சகத்திற்குக் கீழ் செயல்படுகிறது. இதில் தற்போது காலியாக உள்ள குருப்-பி பிரிவில் வரும் பணியிடத்தைப் பிரதிநிதித்துவ அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | Assistant Microphotographist |
பணியிடம் | 3 |
சம்பளம் | ரூ.35,400-1,12,400/- |
வயது வரம்பு :
விண்ணப்பதார்கள் 56 வயதிற்கு அதிகமாக இருக்கக் கூடாது.
கல்வி மற்றும் இதர தகுதிகள்:
இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Reprography -இல் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசு, மாநில அரசு, யூனியன் பிரதேசம், தன்னாச்சி,பொது நிறுவனம், பல்கலைக்கழகம், கல்வி நிறுவனம், ஆராய்ச்சி போன்ற ஏதாவது ஒன்றில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
Also Read : ரூ.2,80,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. முழு விவரங்கள்
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் http://nationalarchives.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : http://nationalarchives.nic.in/
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
Dr.Sanjay Garg,
Deputy Director of Archives
National Archives of India,
Janpath, New Delhi - 110001.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Jobs