ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.35,000 வரை சம்பளம்... இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரூ.35,000 வரை சம்பளம்... இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்து அறநிலையத்துறை

இந்து அறநிலையத்துறை

Hindu Religious & Charitable Endowments Department : தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பொறியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்குப் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களைத் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

பணியின் விவரங்கள் :

பதவியின் பெயர்பணியிடம்
செயற்பொறியாளர்2
உதவி செயற் பொறியாளர்4
உதவிப் பொறியாளர்4

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?

பிற அரசுத்துறை/ அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள 65 வயதிற்கும் குறைவான வயதுடைய பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொகுப்பூதிய விவரங்கள்:

பதவிகள்சம்பளம்
செயற்பொறியாளர் (கட்டுமானம்)ரூ.35,000/-
உதவிச் செயற்பொறியாளர்ரூ.30,000/-
உதவிப் பொறியாளர் (கட்டுமானம்)ரூ.25,000/-

நியமனம் செய்யப்படும் அலுவலகம் :

இந்து சமய அறநிலையத்துறை

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஓய்வு பெற்ற பொறியாளர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://hrce.tn.gov.in/resources

Also Read : மாவட்ட பொது சுகாதாரத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் இதோ..!

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

ஆணையர்,

இந்து சமய அறநிலையத்துறை,

119, உத்தமர் காந்தி சாலை,

நுங்கம்பாக்கம்,

சென்னை - 600 034.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Hindu Endorsements Dept, Jobs, Tamil Nadu Government Jobs