ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்

ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்

Antrix corporation Limited job alert :விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த பொருட்களை உலகளவில் வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த பொருட்களை உலகளவில் வியாபாரம் செய்யும் நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அரசின் விண்வெளி துறையில் கீழ் செயல்படுகின்றனர். இந்த நிறுவனத்தில் பணிபுரியத் தேவையான தகுதிகளைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
  Company Secretary1அதிகபட்சம் 65 வயதுரூ.75,000/-
  Hindi Translator- cumtypist1அதிகபட்சம் 65 வயதுரூ.40,000/-

  கல்வித்தகுதி:

  Company Secretary பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

  Hindi Translator- cumtypist பணிக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிக்குத் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும்.

  Also Read : ரயில்வே ஐடி துறையில் காலியிடங்கள் : தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.antrix.co.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

  விண்ணப்பத்தை பதிவிறக்க செய்ய : விண்ணப்பம் 

  தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :

  Sr.Manager (P&GA), Antrix Corporation Limited, Antariksh Bhavan Campus, New BEL Road, Bengaluru – 560094.Telephone No. 080 – 22178302.

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.11.2022.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Jobs