அணு ஆராய்ச்சி மையத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க நீங்க ரெடியா!

அணு ஆராய்ச்சி மையத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க நீங்க ரெடியா!
பாபா அணு ஆராய்ச்சி மையம்
  • Share this:
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் பணிக்கான காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள் : 92

பணி : Assistant Security Officer (A)


காலியிடங்கள் : 19

பணி : Security Guard

காலியிடங்கள் : 73வயது வரம்பு: 06.12.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சமாக பொதுப்பிரிவினர் 27 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 32 வயதுக்குள்ளும், ஓபிசி பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி : உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டமும், பாதுகாவலர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ.150, பாதுகாவலர் பணிக்கான விண்ணப்பம் ரூ.100 முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://recruit.barc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.12.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : இந்த லிங்கை https://recruit.barc.gov.in/barcrecruit/nbArchive.jsp?unit=ADV கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்க: 'சாப்ட்வேர் மோகம்' மத்திய அரசின் வேலைவாய்ப்பை தவிர்க்கும் தமிழக இளைஞர்கள்! - கல்வி ஆர்வலர்கள்
First published: November 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்