ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்: விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.3

சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ முகாமில் அடுத்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 3.

news18
Updated: November 1, 2018, 4:52 PM IST
ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்: விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.3
மாதிரிப் படம்
news18
Updated: November 1, 2018, 4:52 PM IST
ராணுவத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் முகாம் 2019 ஜனவரி 11-ம் தேதி பல்லாவரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 3.

இந்திய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ முகாமில் அடுத்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் வசிப்பவர்கள் கலந்துகொள்ளலாம்.

இந்த முகாமில் ஜூனியர் கமிஷன் அதிகாரிகள் (மத போதகர்கள் பிரிவு) மற்றும் ஹவில்தார் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முகாமில் பங்கேற்க விரும்புவோர் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் நவம்பர் 3-ம் தேதிக்குள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். முகாமில் கலந்துகொள்வதற்கான அனுமதி அட்டை நவம்பர் 17-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும். அதன்பிறகு அனுமதி அட்டையை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

உடற்பயிற்சி, மருத்துவம் மற்றும் எழுத்துத் தேர்வுகளில் வெற்றிபெறுவது தொடர்பாக யாருடைய உதவியையும் நாட வேண்டாம். தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also watch
First published: November 1, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...