Home /News /employment /

இந்த வாரத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலைவாய்ப்புகள் இதோ!

இந்த வாரத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலைவாய்ப்புகள் இதோ!

Recruitment

Recruitment

Government Recruitment 2022 | எஸ்.பி.ஐ, இந்தியன் வங்கி மற்றும் ஜே.எஸ்.எஸ்.சி ஆகியவற்றிலிருந்து, இந்த வாரம் நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய அரசு வேலைகளின் பட்டியல் இதோ.

நீங்கள் உங்களுக்கான அரசாங்க வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், இதோ உங்களுக்கான வாய்ப்பு காத்திருக்கிறது. ஆம், பல்வேறு துறைகளில் உள்ள அரசு வேலைகளின் பட்டியலை உங்களுக்காக தொகுத்துள்ளோம். எஸ்.பி.ஐ, இந்தியன் வங்கி மற்றும் ஜே.எஸ்.எஸ்.சி ஆகியவற்றிலிருந்து, இந்த வாரம் நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய அரசு வேலைகளின் பட்டியல் இதோ. இவற்றை சிறப்பான முறையில் பயன்படுத்தி அரசாங்க வேலையை பெறுங்கள்.



இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு :

இந்தியன் வங்கி 312 காலியாக உள்ள எஸ்.ஓ (சிறப்பு அதிகாரிகள்) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. மூத்த மேலாளர்கள், தலைமை மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்களை பணியமர்த்துவதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரவுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஜூன் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பட்டதாரியாக இருக்க வேண்டும் அல்லது CA தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது தொடர்புடைய முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிகளுக்கு மாதம் ரூ.36,000 முதல் ரூ.89,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வேலைவாய்ப்பு :

எஸ்.பி.ஐ வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் 641 பணியிடங்களை நிரப்ப ஓய்வுபெற்ற பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் எஸ்.பி.ஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 7. இதில் 503 சேனல் மேலாளர் வசதியாளர் பதவிகள், 130 சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் பதவிகள், மற்றும் 8 துணை அதிகாரி பதவிகள் அடங்கும்.



மேலும், விண்ணப்பதாரர்கள் 60 முதல் 63 வயதுடையவராக இருக்க வேண்டும். எஸ்.பி.ஐ-யின் ஷார்ட்லிஸ்டிங் கமிட்டியால் தீர்மானிக்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் தேர்வுப் பட்டியல் செய்யப்படும். நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதித் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பதிவுக்கான சம்பளம் மாதம் ரூ.36,000 முதல் ரூ.41,000 வரை வழங்கப்படுகிறது.

Also Read : ரிமோட் வேலை, ஹைப்ரிட் மாடல், குறைவான வேலை நேரம்.. இளைஞர்கள் விரும்புவது என்ன? சர்வே முடிவுகள்

ஜார்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையம் (JSSC) வேலைவாய்ப்பு 2022

ஜார்க்கண்ட் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (JSSC) மாநில அரசின் பல்வேறு துறைகளில் 991 கிளார்க் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் JSSC'இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 19 ஆகும். இதற்கான விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வித் தகுதியின்படி சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறையானது எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சுத் தேர்வு அல்லது கணினி அறிவுத் தேர்வு ஆகியவை அடங்கும். ஸ்டெனோகிராபர் பதவிக்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையிலும், எழுத்தர் பதவிக்கு ரூ.19,000 முதல் ரூ.63,200 வரையிலும் சம்பளம் வழங்கப்படுகிறது.

Also Read : நீங்க 30 வயது நபரா?.. வேலை விஷயத்தில் இந்த தவறை இனியும் செய்யாதீங்க..

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வேலைவாய்ப்பு 2022

பணியாளர் தேர்வாணையம் (SSC) தேர்வுப் பதவிக் கட்டம் X/2022க்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எஸ்.எஸ்.சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 13 ஆகும். நாடு முழுவதும் மொத்தம் 2065 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: Employment news, Government jobs, Recruitment

அடுத்த செய்தி