RBI Grade B Post admission letter : கிரேடு பி பிரிவு தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதிச் சீட்டினை
https://opportunities.rbi.org.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு குறித்து நிபந்தனைகள், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் தேர்வு அனுமதிச் சீட்டில் தெரிவிக்கப்படும்.
கணினி அடிப்படையிலாலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்பைடயில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும்.
அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தனித்துவமான பதிவுக்கணக்கு (Registration Number), கடவுச் சொல் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி அனுமதிச் சீட்டை பதிவிறக்க செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் பதிவு செய்த பின்னர், குறுந்தகவல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பதவிக் கணக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும்.
இணைய வழி விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட பிறந்த தேதி தொடர்பான தகவலை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய பயன்படுத்த வேண்டும்.
ஒரே நேரத்தில் அதிகப்படியான விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்ய முயற்சி செய்வதால், தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் போதிய கால அவகாசத்தில் அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இணைய வழி மூலம் 28-05-2022 அன்று வரை அனுமதிச்ச சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அதன்பிறகு, அசச்சேவை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்:
பதவி |
மொத்த காலிப்பணியிடங்கள் |
ஒதுக்கீடு அற்றது |
பட்டியல் கண்ட சாதிகள் (SC) |
பட்டியல் கண்ட பழங்குடியினர் (ST) |
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC)
$ |
பொருளாதா ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்
@ |
மொத்தம் |
மாற்றுத் திறனாளிகள் |
A |
B |
C |
D |
1. Officers in Grade ‘B’(DR)- General |
109 |
32 |
15 |
59 |
23 |
238 |
5(3) |
7(4) |
6(3) |
4(2) |
2. Officers in Grade ‘B’(DR)- DEPR |
11 |
4 |
5(3) |
8 |
3 |
31 |
- |
- |
1(1) |
1 |
3. Officers in Grade ‘B’(DR)- DSIM |
7 |
7(4) |
5(4) |
4 |
2 |
25 |
1 |
1(1) |
- |
1(1) |
Delhi Police Head Constable: டெல்லி காவல்துறையில் தலைமை காவலர் பணி - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்
எழுத்துத் தேர்வு :
ஆன்லைன் தேர்வு தேதி (தாள்-I) அதிகாரி கிரேடு பி (General): மே 28, 2022
ஆன்லைன் தேர்வு தேதி (தாள்-II & III) அதிகாரி கிரேடு B (General): ஜூன் 25, 2022
ஆன்லைன் தேர்வு தேதி (தாள்-I) அதிகாரி கிரேடு B (DEPR & DSIM): ஜூலை 02, 2022
ஆன்லைன் தேர்வு தேதி (தாள்-II & III) அதிகாரி கிரேடு B (DEPR & DSIM): ஆகஸ்ட் 06, 2022
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.