Home /News /employment /

ரிசர்வ் வங்கி ஒப்பந்த அடிப்படையில் வேலை... ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்... விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

ரிசர்வ் வங்கி ஒப்பந்த அடிப்படையில் வேலை... ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்... விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

ரிசர்வ வங்கி,

ரிசர்வ வங்கி,

RBI recruitment 2022 : தகுதியான விண்ணப்பதாரர்களின் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

    இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) காலியாக உள்ள பணிகளுக்கு காலியிட அறிவிப்பினை வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நாளை மாலைக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும் படி விண்ணப்பிக்க வேண்டும். 18.07.2022ம் தேதி விண்ணப்பிக்க தொடக்க தேதி . அன்றைய தினம் அறிவிப்பு வெளியானது.

    Bank’s Medical Consultant (BMC) பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்கள் முதலில் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவர்.

    வேலைக்கான விவரம் :























    நிறுவனம் / துறையின் பெயர்இந்திய ரிசர்வ் வங்கி (RBI)
    பணியின் பெயர்Bank’s Medical Consultant (BMC)
    விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி18.07.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி02.08.2022

    RBI ஆட்சேர்ப்பு 2022 கல்வித் தகுதி விவரம் :

    விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம், அலோபதி மருத்துவ முறையில் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    பொது மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம் மற்றும் ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் மருத்துவப் பயிற்சியில் குறைந்தபட்சம் இரண்டு (02) ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    RBI ஆட்சேர்ப்பு 2022 வயது வரம்பு :

    BMC பதவிக்கான வயது வரம்பு அரசு விதிமுறைகளின்படி உள்ளது.

    RBI BMC சம்பள தொகுப்பு 2022 :

    ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 1000/-.சம்பளமாக வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    RBI ஆட்சேர்ப்பு 2022 தேர்வு செயல்முறை :

    தகுதியான விண்ணப்பதாரர்களின் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணலுக்கு அழைக்கப்படாத விண்ணப்பதாரர்களுடன் வங்கி எந்த கடிதப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளாது.

    RBI ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது :

    விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத் தாரர்கள் “Application for the post of Bank’s Medical Consultant on Contract Basis with fixed hourly remuneration” என அஞ்சல் உரையின் மீது எழுதி கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : General Manager & O-i-C, Reserve Bank of India, Lilashing Khongnangkhong, Opposite Manipur Legislative Assembly, Imphal-795001.

    அறிவிப்பு விவரம் :

    https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/BMC18072022F6783C97A7CB44BF4A0E14A07C99FBDC6.PDF

    https://rbi.org.in/home.aspx

    இந்த இணைப்பில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, RBI

    அடுத்த செய்தி