ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மாதம் ரூ.55,000 சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை... கல்வித்தகுதி, கடைசி தேதி குறித்த முழு விவரம்

மாதம் ரூ.55,000 சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை... கல்வித்தகுதி, கடைசி தேதி குறித்த முழு விவரம்

ஆர்பிஐ

ஆர்பிஐ

RBI | இந்திய ரிசர்வ் வங்கியில் ஆபீசர் கிரேடு பி பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 18, 2022 ஆகும்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  இந்திய வங்கிகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒழுங்குமுறை அமைப்பான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), பல துறைகளில் உள்ள 294 கிரேடு B அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை பணியமர்த்த உள்ளது.

  கிரேடு பி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க அனைத்து தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறும் ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டு உள்ளது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியில் ஆபீசர் கிரேடு பி பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 18, 2022 ஆகும்.

  RBI ஆஃபிசர் கிரேடு B ஆட்சேர்ப்பு 2022: காலியாக இருக்கும் பணியிட விவரங்கள்...

  போஸ்ட்: ஆஃபிசர் கிரேடு பி (ஜெனரல்)

  காலியிடங்களின் எண்ணிக்கை: 238

  சம்பளம்: ரூ.35,150 - ரூ.62,400

  போஸ்ட்: ஆஃபிசர் கிரேடு பி (டிஇபிஆர் - DEPR)

  காலியிடங்களின் எண்ணிக்கை: 31

  சம்பளம்: ரூ.35,150 - ரூ.62,400

  போஸ்ட்: ஆஃபிசர் கிரேடு பி (டிஎஸ்ஐஎம் -DSIM)

  காலியிடங்களின் எண்ணிக்கை: 25

  சம்பளம்: ரூ.35,150 - ரூ.62,400

  இதனிடையே மாதத்திற்கு ரூ.55,000 என்ற ஆரம்ப ஊதியத்துடன் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

  RBI ஆஃபிசர் கிரேடு பி 2022 ஆட்சேர்ப்புக்கான தகுதி வரம்புகள்:

  கிரேடு பி (ஜெனெரல்):

  விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் 12-வது அல்லது டிப்ளமோ அல்லது அதற்கு சமமான மற்றும் 10-ஆம் வகுப்புத் தேர்வுகளில் குறைந்தப்பட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். SC/ST/PwBD-ஆக இருப்பின் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

  கிரேடு பி (டிஇபிஆர்):

  விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் / பொருளாதார அளவியல் / அளவு பொருளாதாரம் / கணித பொருளாதாரம் / ஒருங்கிணைந்த பொருளாதார பாடம் / நிதியியல் இவற்றில் ஏதாவதொன்றில் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.

  கிரேடு பி (டிஎஸ்ஐஎம்):

  விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் /கணித புள்ளியியல் /கணித பொருளாதாரம் / பொருளாதாரவியல் / புள்ளியியல் மற்றும் தகவலியல் இவற்றில் ஏதாவதொன்றில் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.

  * விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாகவோ அல்லது நேபாளம் /பூடானின் குடிமகனாகவோ இருக்க வேண்டும்.

  * விண்ணப்பதாரர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஜனவரி 01, 2022 அன்று 30 வயதை எட்டியிருக்க கூடாது. அதாவது விண்ணப்பதாரர் ஜனவரி 02, 1992-க்கு முன்னதாகவும், ஜனவரி 01, 2001-க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும்.

  Also Read ; 50,000க்கும் மேற்பட்ட இளைஞர்களை பணியமர்த்த உள்ளோம் - இன்ஃபோசிஸ்

  பொது / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) / பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை சேர்ந்த (EWS) விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். SC/ST/ PwBD ஆகிய பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஃபேஸ் I மற்றும் ஃபேஸ் II ஆன்லைன் தேர்வில் பங்கேற்க வேண்டும். இது இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெறும்.

  தேர்வு தேதிகள்:

  ஆன்லைன் தேர்வு தேதி (தாள்-I) அதிகாரி கிரேடு பி (General): மே 28, 2022

  ஆன்லைன் தேர்வு தேதி (தாள்-II & III) அதிகாரி கிரேடு B (General): ஜூன் 25, 2022

  ஆன்லைன் தேர்வு தேதி (தாள்-I) அதிகாரி கிரேடு B (DEPR & DSIM): ஜூலை 02, 2022

  ஆன்லைன் தேர்வு தேதி (தாள்-II & III) அதிகாரி கிரேடு B (DEPR & DSIM): ஆகஸ்ட் 06, 2022\

  Published by:Vijay R
  First published:

  Tags: Employment, Job