ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரேஷன் கடையில் வேலை..! உடனே விண்ணப்பியுங்கள்

ரேஷன் கடையில் வேலை..! உடனே விண்ணப்பியுங்கள்

ரேஷன் கடை வேலைவாய்ப்பு

ரேஷன் கடை வேலைவாய்ப்பு

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் மொழியில் எழுதப்படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman)மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து http://drbtvmalai.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே 14.11.2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

பதவி விவரம்: நியாய விலைக்கடை விற்பனையாளர் (Salesman)

காலி பணியிடங்கள் : 362

சம்பளம் : தொகுப்பு ஊதியம் ரூ. 6250/ - நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ. 8600 - ரூ. 29000 வரை

கல்வித்தகுதி : மேல்நிலை வகுப்பு (+2 தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி தேர்ச்சி

பதவி விவரம் : நியாய விலைக்கடை கட்டுநர் ( Packer)

காலி பணியிடங்கள் : 14

சம்பளம் : தொகுப்பு ஊதியம் ரூ.5,500/- நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை, ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.7,800 - 26,000 வரை

கல்வித்தகுதி : பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி ( பத்தாம் வகுப்பு தேர்ச்சி)

மொழித் திறன்: விண்ணப்பதாரர் இந்த அறிவிப்பு வெளியிடும் நாளன்று தமிழ் மொழியில் எழுதப்படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://drbtvmalai.net/doc_pdf/Notification_1.pdf சென்று தெரிந்துக்கொள்ளவும்

First published:

Tags: Job search, Job vacancies, Ration Shop, Tiruvannamalai