Home /News /employment /

7,124 ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியானது

7,124 ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியானது

காட்சிப் படம்

காட்சிப் படம்

 www.rrbchennai.gov.in/ என்ற அதிகார இணையப் பக்கத்திற்குச் சென்று,  LIST OF CANDIDATES SELECTED FOR DOCUMENT VERIFICATION FOR PAY-LEVEL-6 POSTS என்ற இணைப்பை கிளிக் செய்யவும். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
    தொழில்நுட்பம் அல்லாத ஆறாம் நிலை பணிகளுக்கான  7,124 ரயில் நிலைய அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை ரயில் வாரியம் வெளியிட்டது.

    இந்திய ரயில்வே துறையின் பல பிரிவுகளில் 1.4 லட்சம் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை முன்னதாக ரயில்வே வாரியம் வெளியிட்டது. CEN 03/2019 (Ministerial & Isolated Categories) ஆட்சேர்ப்புக்கான தேர்வு முதற்கட்டமாகவும், CEN 01/2019 (NTPC categories) ஆட்சேர்ப்புக்கான தேர்வு இரண்டாவது கட்டமாகவும், CEN No. RRC- 01/2019 ஆட்சேர்ப்புக்கான தேர்வு மூன்றாவது கட்டமாகவும் நடைபெற்றது.

    இதில், தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளில் நிலை 2,3,4,5,6 என்ற சம்பள நிலைக்கேற்ப தேர்வுகள் தனித்ததனியாக நடத்தப்பட்டன. அனைத்து நிலைகளுக்கும் ஒரே கட்டமாக முதற்கட்ட தேர்வு கணினி வழியில் நடைபெற்றது.

    தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளில் (ரயில் நிலைய அதிகாரி (Station Masters) பதவிக்கான நிலை 6-ல் 7124 காலிப்பணியிடங்கள் உள்ளன.

    நிலை 6  ரயில் நிலைய அதிகாரி பணிக்கான இரண்டாவது நிலை எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நாடு முழுவதும் 25 மாநிலங்களில் உள்ள 111 நகரங்களில் அமைந்துள்ள 156 மையங்களில் நிலை 6 தேர்வு நடத்தப்பட்டது. இந்த இரண்டாவது நிலை எழுத்துத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூன்  மாதம் வெளியாகியது. இதில், மொத்தமாக 57,117 தேர்வர்கள் கணினி திறனறிவு தேர்வுக்கு தகுதி பெற்றனர். 

    இதனையடுத்து, ரயில் அதிகாரி பணிக்கான கணினி திரணறிவு தேர்வு கடந்த ஜுலை மாதம் 30ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    தகுதி பட்டியல்:

    www.rrbchennai.gov.in/ என்ற அதிகார இணையப் பக்கத்திற்குச் சென்று,  LIST OF CANDIDATES SELECTED FOR DOCUMENT VERIFICATION FOR PAY-LEVEL-6 POSTS என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.

    தகுதி பட்டியல் திரையில் தோன்றும்.

    எதிர்கால தேவைகளுக்கு பயன்படும் என்பதால், பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது.

    தகுதிப் பட்டியலில் இடம்பெற்றவர்கள், அசல் சாண்றிதழ் சரிப்பரப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பிறகு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    இதையும் வாசிக்கNEET Exam Results: 705 மதிப்பெண்களுடன் தமிழகத்தில் முதலிடம் பிடித்த திரிதேவ் விநாயகா.. தேசிய அளவில் 30ம் இடம் பிடித்தார்

    தெரிவு முறை: இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், கணினி திறனறிவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Indian Railways

    அடுத்த செய்தி