ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரயில்வே பணிக்கான தேர்வு முடிவுகள் : இன்று வெளியானது கால அட்டவணை

ரயில்வே பணிக்கான தேர்வு முடிவுகள் : இன்று வெளியானது கால அட்டவணை

ஆர்.ஆர்.பி

ஆர்.ஆர்.பி

RRB Result : இந்தியன் ரயில்வே பணிக்களுக்கு நடத்தப்படும் கணினி வழி தேர்வுக்கான முடிவுகள் வெளியிடுவது குறித்து ஆர்.ஆர்.பி .அட்டவணை வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியன் ரயில்வே பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்த கால அட்டவணையை ஆர்.ஆர்.பி வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 35 ஆயிரத்து 281 காலியிடங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன.

  இதில், 21 ஆர்.ஆர்.பி. தேர்வுகளில் 17-தேர்வுகளுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. எஞ்சியவற்றில் 5-ம் நிலைக்கான தேர்வு முடிவுகள் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  5- நிலையில் 17,393 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. முடிவுகள் வெளிவந்ததும் தேர்வானவர்களுக்கு டிசம்பர் இரண்டாம் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அதனையடுத்து ஜனவரி மூன்றாம் வாரத்திற்குள் பணி நியமனத்துக்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  Also Read : ஜிஎஸ்டி மூலம் அதிக லாபத்தை பெறுவது எப்படி? இதோ அதற்கான எளிமையான தீர்வு

  4-ம் நிலைக்கான தேர்வு முடிவுகள் 2023 ஜனவரி 2-ம் வாரத்துக்குள் வெளியிடப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து 3-ம் நிலை பணியிடங்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் 2023 மார்ச் முதல் வாரத்துக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அத்துடன், 2-ம் நிலை பணியிடங்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் மார்ச் 4-வது வாரத்துக்குள் முடிவடையும் எனவும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

  அறிவிப்பு அட்டவணைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Railway Jobs