ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரயில்வேயில் கிளார்க் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரயில்வேயில் கிளார்க் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரயில்வேயில் வேலைவாய்ப்பு

ரயில்வேயில் வேலைவாய்ப்பு

வடக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வடக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  இந்திய ரயில்வே துறையில் வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. வடக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

  வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்  :  SQ 2021-22

  அறிவிப்பு வெளியான நாள்:               26-11-2021

  விண்ணப்பிக்க கடைசி தேதி :         25-12-2021

  பணி :  கிளார்க்- டைப்பிஸ்ட் (Sports Quota)

  காலிப்பணியிடங்கள் :                                    21

  விளையாட்டு தகுதி:

  தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், ஜிம்னாஸ்டிக், ஹாக்கி, பவர் லிஃப்டிங், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், வெயிட் லிஃப்டிங் விளையாட்டுகளில் சர்வதேச போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய போட்டிகள் போன்ற எதாவதொன்றில் பங்குபெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்த விளையாட்டுகளில் 3-வது இடத்தில் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும். 01.04.2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டுமே கணக்கிடப்படும்.

  தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர், இந்த பதவிக்கும் விண்ணப்பிப்பவர்கள் தற்போது சம்பந்தப்பட்ட விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.

  விண்ணப்ப கட்டணம்: தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.500 ( எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250 செலுத்த வேண்டும்) விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்

  விண்ணப்பிக்கும் முறை: www.rrcpry.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை இந்த லிங்கில் http://rrcpryjsports.co.in/ பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Government jobs, Indian Railways, Job vacancies, Recruitment