ரயில்வேயில் 1.30 லட்சம் பேருக்கு வேலை- எப்படி விண்ணப்பிப்பது?

அனைத்து பணிகளுக்கும் ரயில்வே இணையதளங்கள் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

News18 Tamil
Updated: March 4, 2019, 5:50 PM IST
ரயில்வேயில் 1.30 லட்சம் பேருக்கு வேலை- எப்படி விண்ணப்பிப்பது?
இந்திய ரயில்வே துறை.
News18 Tamil
Updated: March 4, 2019, 5:50 PM IST
ரயில்வேயில் 1.30 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  

ரயில்வே துறையில் மொத்தம் 1.30 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் 30 ஆயிரம் பணியிடங்களுக்கு மூன்று கட்டமாக விண்ணப்ப தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எப்போது விண்ணப்பிக்கலாம்?


கிளர்க், சரக்கு பாதுகாவலர், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு பிப்ரவரி 28-தேதியிலிருந்தும் செவிலியர், சுகாதார ஆய்வாளர், மருந்தாளுநர் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மார்ச் 4தேதிலிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை தொடங்கியது. ஸ்டெனோகிராபர், மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட அமைச்சகரீதியான பணிகளுக்கு ஆன்லைனில் மார்ச் 8 முதல் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். லெவல் ஒன் வகையைச் சேர்ந்த ஒரு லட்சம் பணியிடங்களுக்கு மார்ச் 12ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்:
அனைத்து பணிகளுக்கும் ரயில்வே இணையதளங்கள் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இது பற்றிய முழுமையான விவரங்கள் இந்த வார எம்ப்ளாய்ன்ட் மென்ட் இதழில் வெளியாகியுள்ளது. ரயில்வே பணிகளில் எஸ்.சி., எஸ்.டி, ஓபிசி உடன் இந்த முறை உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. ஏற்கெனவே ஒன்றரை லட்சம் ஆட்களை பணிக்கு சேர்ப்பதற்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

Loading...

Also Watch:
First published: February 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...