எந்தவித தேர்வுஇன்றி 1,033 தொழிற் பழகுனர்களை பணியமர்த்துவது தொடர்பான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தென்கிழக்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள் எண்ணிக்கை : 1,033
DRM Office, ராய்ப்பூர் பிரிவு : 696 இடங்கள்
Welder Gas and Electric - 119 posts
Turner - 76 posts
Fitter - 198 posts
Electrician - 154 posts
Stenographer (English) -10 posts
Stenographer (Hindi) - 10 posts
Computer Operator and programme Assistant - 10 posts
Health and Sanatory Inspector - 17 posts
Machinist - 30 posts
Mechanic Diesel - 30 posts
Mechanic Repair and Air Conditioner, 12 posts
Mechanic and Auto Electrical and Electronics -30 posts
Wagon Repair Shop, ராய்ப்பூர் - 337 இடங்கள்.
Welder - 140 posts
Turner - 15 posts
Fitter - 140 posts
Electrician - 15 posts
Mechanist -20 posts
Stenographer (Hindi) - 2 posts
Computer Operator and Programme Assistant - 5 posts
தெரிவு செய்யப்படும் முறை: 10ம் வகுப்பு அல்லது சமமான கல்வியில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 15 முதல் 24 வயது வரை.
அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும்.
ஆன்லைன் மூலமாக 24.05.2022 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை அறிவதற்கான இணையதளம்
secr.indianrailways.gov.in.
பணியிடங்களில் முன்னுரிமை:
இந்திய ரயில்வே குறிப்பிட்ட பிரிவுகளில் பழகுனர் சட்டத்துக்கு உட்பட்டு 1963 ஆகஸ்ட் முதல் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எந்தவித போட்டி அல்லது தேர்வு இன்றி பழகுனர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு ரயில்வே பயிற்சி மட்டுமே அளித்து வந்த போதிலும், பயிற்சி முடித்த நபர்களுக்கு 2004 முதல் 1-ம் மட்ட பணிகளில் உதவியாளர்களாக பணியமர்த்தப்படுகின்றனர்.
பணி தேவையைக் கருத்தில் கொண்டு இவர்கள் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். தற்காலிக ரயில்வே பணியாளர்களான இவர்களுக்கு சில பயன்கள் அளிக்கப்படுகின்றன. முறையான நடைமுறை விதிகளைக் கடைப்பிடிக்காமல் இவர்கள் நிரந்தர பணிகளில் சேர்க்கப்படமாட்டார்கள்.
இந்திய ரயில்வேயில் வெளிப்படையான, நியாயமான மாற்றங்களை செயல்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, 2017 முதல் 1-ம் மட்ட பணியிடங்களில், கணினி அடிப்படையிலான, தேசிய அளவிலான பொதுத்தேர்வு மூலம் அனைத்து பணி நியமனங்களும் நடைபெறுகிறது.
தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டவரா? இந்திய உச்சநீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு விண்ணப்பியுங்கள்
ரயில்வே நிறுவனங்களில் பழகுனர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு , குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், மருத்துவ தரத்துக்கு உட்பட்டு, பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.