ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

புதுக்கோட்டையில் டேட்டா எண்ட்ரி பணி - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டையில் டேட்டா எண்ட்ரி பணி - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

கணினி இயக்குபவர்கள் (Data Entry Operator) பணியிடம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முக்கியத் தகவல்களை தெரிவித்துள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர்கள் (Data Entry Operator) பணியிடம் தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும், புதிதாக விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் அம்மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு கணினி இயக்குபவர் வீதம் 13 கணினி இயக்குபவர்கள் (Data Entry Operator) பணியிடம் பகுதிநேர அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நேரடி நியமனம் செய்திட மாவட்ட ஆட்சித் தலைவர்  அறிவிக்கை எண்:ந.க.வி8/693/2018, நாள்:28.10.2021 அன்று பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

கொரோனா நோய் தொற்று மற்றும் இனசுழற்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் நேர்முக தேர்வு நடத்திட இயலவில்லை. தற்போது,

நிர்வாக நலன் கருதி ஏற்கனவே 28.10.2021 அன்றைய பத்திரிக்கை செய்தியின்படி அறிவிக்கப்பட்ட பகுதிநேர தற்காலிக கணினி இயக்குபவர்கள் நேரடி நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இரத்து செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்க: சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வேலை : நேர்காணல் மூலம் நியமனம்

கணினி இயக்குபவர் (Data Entry operator) காலிப்பணியிட நியமனத்திற்கு விண்ணப்பங்கள் பெற பத்திரிக்கை செய்தி பின்னர் வெளியிடப்படும். அதன்படி ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் மீளவும் புதிதாக விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கபபட்டுள்ளது.

இதையும் வாசிக்க: Current Affairs 1: போட்டித் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தலைப்புகள் இதோ!

First published:

Tags: Tamil Nadu Government Jobs