புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 (முற்றிலும் தற்காலிகமானது ) பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியுடைய நபர்கள் உரிய சான்றிதழின் ஜெராக்ஸ் நகலுடன் சுயசான்றொப்பமிட்டு இணைத்து பதிவு தபால் மூலம் கீழே குறிப்பிடப்பட்ட உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் |
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் (Pudukkottai District Court) |
வேலையின் பெயர் |
சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno Typist) |
காலிப்பணி இடங்கள் |
காலிப்பணி இடங்கள் |
பணியிடம் |
புதுக்கோட்டை ( Pudukkottai – Tamil Nadu ) |
வயது |
18 to 37 years |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
27.09.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
18.10.2021 |
சம்பள விவரம் |
ரூ. 20,600 – ரூ.65,500 + இதர படிகள் |
இணையதள முகவரி |
districts.ecourts.gov.in/pudukkottai |
தேர்ந்தெடுக்கபடும் முறை |
எழுத்து தேர்வு முறை |
தேர்ந்தெடுக்கபடும் முறை : எழுத்து தேர்வு முறை :
எழுத்து தேர்வில் 35 கேள்விகள் (கொள்குறி வகை) கொடுக்கப்பட்டு
இருக்கும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 2 மதிப்பெண்கள்
வழங்கப்படும். காலஅளவு 60 நிமிடங்கள் ( One Hour).
வினாத்தாள் கீழ்க்கண்ட பகுதிகளை உள்ளடக்கியது :
பகுதி அ : பொது அறிவு
பகுதி ஆ : பொது தமிழ்
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?
விண்ணப்பங்களை (ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு, உரிய சுயசொன்றொப்பத்துடன்) தற்பொது பணி செய்யும் விபரங்களுடனும் (எதுவும் இருப்பின்) அனைத்து கல்விச்சொன்றிதழ்கள், சாதிச்சொன்றிதழ் மற்றும்
முன்னுரிமைக்கொன சான்றிதழ்கள் (ஊனமுற்றொர், ஆதரவற்ற வித வை மற்றும் கலப்புத் திருமணம் பேொன்றவை) மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை உரிய சுய
சொன்றொப்பத்துடன் (Self attestation) கீழ்க்கொணும் முகவரிக்கு 18.10.2021 ம் தேதிக்குள் இவ்வலுவலகத்திற்கு கிடைக்குமொறு பதிவு தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
புதுக்காட்டை மாவட்டம் - 622 001.
(காலதாமதமாக க டைசி நாள் அன்று அலுவலக நேரம் அதாவது மாலை 5.45 க்கு பிறகு பெறப்படும் விண் ணப்பங் கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்காள்ளபடமாட்டாது) எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
- 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைக்கல்வி அல்லது கல்லூரி கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.
- அரசு தொழில் நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வு இரண்டிலும் கீழ்கண்டவாறு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது )
- தமிழில் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது )
- ஆங்கிலத்தில் முதுநிலை தமிழில் இளநிலை (அல்லது )
- கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு : சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை -3 ) தெரிவு முறை :
முதலில் இனம் 1ல் குறிப்பிட்டுள்ள தொழில் நுட்ப கல்வித் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் முதலில் தேர்வு செய்யப்படுவார்கள்
இனம் 1ல் குறிப்பிட்டுள்ள தொழில் நுட்ப கல்வித் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கிடைக்கபெறாவிடில் இனம் 2ல் குறிப்பிட்டுள்ள தொழில் நுட்ப கல்வித் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
இனம் 1 மற்றும் இனம் 2 ல் குறிப்பிட்டுள்ள தொழில் நுட்ப கல்வித் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கிடைக்கபெறாவிடில் இனம் 3ல் குறிப்பிட்டுள்ள தொழில் நுட்ப கல்வித் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
குறிப்பு : இடைநிலை தரசான்றிதழை முதுநிலை தரத்திற்கு இணையாக கருத இயலாது.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://districts.ecourts.gov.in/sites/default/files/Notifiation%20-%20Recruitment%20for%20Steno%20Typists_0.pdf இந்த லிங்கில் சென்று காணவும். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.