Puducherry Anganwadi Recruitment 2021 : அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021... மொத்தம் 279 காலியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலைவாய்ப்பு

புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 04 / 06/2021.

  • Share this:
    அங்கன்வாடி (Anganwadi) என்பது இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம் ஆகும். இங்கு பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன. 1975 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் (ICDS) கீழ் குழந்தைகள் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவும் அவர்களிடையே பெருமளவில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் இம் மையங்கள் துவங்கப்பட்டன.

    தமிழ்நாட்டில் இம்மையங்கள் பொதுவாக பால்வாடி என்ற பெயரில் அறியப்படுகின்றன. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, அரம்ப கால கல்வி கற்பதற்கான சூழல், குழந்தைகள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக வளர்வதற்கு தேவையான பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.

    தற்போது புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    ALSO READ |  ரூ.63,000/- வரை சம்பளம்...தமிழக அஞ்சல் துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

    புதுச்சேரி அங்கன்வாடி வேலைவாய்ப்பு விவரங்கள்:







































    நிறுவனம் அங்கன்வாடி
    பணி அங்கன்வாடி ஊழியர், அங்கன்வாடி உதவியாளர்


     

    காலிப்பணியிடங்கள்
    மொத்தம் - 279,
    அங்கன்வாடி ஊழியர் - 136,
    அங்கன்வாடி உதவியாளர் - 104.
    பணியிடம் பாண்டிச்சேரி
    காரைக்கால்
    மாஹி
    ஏனாம்
    வயது 18 முதல் 35 வரை
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 26/05/2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    04 / 06/2021.


     

    சம்பள விவரம்


    அங்கன்வாடி ஊழியர் ரூ.6,540/-

    அங்கன்வாடி உதவியாளர் ரூ. 4,375/-
    கல்வி தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://py.gov.in/sites/default/files/wcd26052021anx12.pdf

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணhttps://cdn.s3waas.gov.in/s3ddb30680a691d157187ee1cf9e896d03/uploads/2021/05/2021052778.pdf

    விண்ணப்ப படிவம் பெற https://py.gov.in/sites/default/files/wcd26052021app.pdf

     
    Published by:Sankaravadivoo G
    First published: