• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு


அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு

கணினி வழி போட்டித் தேர்விற்கான கால அட்டவணை அக்டோபர் மாதம் 28முதல் 31 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் இன்று வெளியிடப்படுகின்றது.

  • Share this:
    அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.கணினி வழியில் நடத்தப்படும் தேர்வில், ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,அரசு பல் தொழில் நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு பணித்தேர்வு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் 14/2019 நாள் 27.11.2019 அன்று வெளியிட்டது. கணினி வழி தேர்வினை நடத்திட உத்தேச தேதியாக அக்டோபர் மாதம் 28 முதல் 30 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு பல் தொழில் நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான கணினி வழி போட்டித் தேர்விற்கான கால அட்டவணை அக்டோபர் மாதம் 28முதல் 31 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் இன்று வெளியிடப்படுகின்றது. இத்தேர்விற்கான தேர்வர்களுக்குரிய அனுமதி சீட்டு கூடிய விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்படுகின்றது. இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை தேர்வு மையங்களின் தயார் நிலை மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    SCHEDULE






















































































    Subject Batch Date
    Computer Science Engineering 1 Thursday, October 28,2021
    Printing Technology F.N Thursday, October 28,2021
    Physics 2A.N Thursday, October 28,2021
    Information Technology 2A.N Thursday, October 28,2021
    Modern Office Practice 5F.N Thursday, October 28,2021
    Mathematics 3 F.N Friday, October 29,2021
    Production Engineering 3 F.N Friday, October 29,2021
    Electrical & Electronics Engineering 4 A.N Friday, October 29,2021
    Textile Technology 4 A.N Friday, October 29,2021
    Instrumentation & Control Engineering 5 F.N. Saturday, October 30,2021
    Civil Engineering 5 F.N. Saturday, October 30,2021
    Electronics & Communication Engineering 6 A.N. Saturday, October 30,2021
    Mechanical Engineering 7 F.N. Sunday, October 31,2021
    Chemistry 8 A.N Sunday, October 31,2021
    English 8 A.N Sunday, October 31,2021


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: