ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

போராடத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்கள் டிஸ்மிஸ் பண்ணுங்க- அரசு உத்தரவு

போராடத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்கள் டிஸ்மிஸ் பண்ணுங்க- அரசு உத்தரவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Guest Lecturer Protest: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விரிவுரையாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் , தவறும் பட்சத்தில் பணியிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பல்வேறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகினர். இந்த போராட்டத்தால், மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதாக கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தையடுத்து, கல்லூரி கல்வி இயக்குனர் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

  அதில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விரிவுரையாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், போராட்டத்தை தொடரும் பட்சத்தில் உடனடியாக பணியிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மாற்றாக உரிய தகுதியுடன் இருக்கும் கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கவும் கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

  இதையும் வாசிக்க: டெட் தாள் - I அட்மிட் கார்டு வெளியானது: பதிவிறக்கம் செய்வது எப்படி?

  தமிழ்நாட்டில்  அரசு கல்லூரிகளில் 4000க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 2006ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு இதுநாள் வரையில் பணிபாதுகாப்பு வழங்கப்பட வில்லை. இந்நிலையில், இவர்களில் சிலருக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, பல்வேறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: College