ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு : ரூ.30,000 சம்பளம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு : ரூ.30,000 சம்பளம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

TN Kancheepuram jobs : தமிழக மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக காஞ்சிபுரம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்குப் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விவரங்கள் கீழ் வருமாறு:-

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
பாதுகாப்பு அலுவலர்1ரூ.30,000/-

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கக் குறைந்த வயது தகுதி 22 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30, MBC,BC பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 மற்றும் SC,ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

சமூகவியல் /சமூகப் பணி/உளவியல் ஆகிய பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி மற்றும் தட்டச்சு திறன் தேவை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியுடைய பெண்கள் https://kancheepuram.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://kancheepuram.nic.in/

Also Read : மத்திய அரசு கழகத்தில் ரூ.74 ஆயிரம் சம்பளத்தில் 8-12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை : விண்ணப்பிப்பது எப்படி?

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட சமூகநல அலுவலகம்,

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகம், காஞ்சிபுரம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 07.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Employment, Jobs, Tamil Nadu Government Jobs, Women