ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?

டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?

ஐசிஎம்ஆர்

ஐசிஎம்ஆர்

ICMR jobs : மத்திய அரசில் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் மற்றும் காசநோய் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் இணைந்து டிப்ளமோ படித்தவருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியாயுள்ளது. தற்காலிக அடிப்படையில் எடுக்கும் இப்பணியில் விவரங்களை இங்குத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

  பணியின் விவரங்கள் :

  பணியின் பெயர்Project Technician III (Field Worker)/(Lab Technician)
  காலிப்பணியிடம்3
  ஊர்மதுரை, வேலூர் மற்றும் சென்னை
  வயதுஅதிகபட்சம் 30 வயது
  சம்பளம்ரூ.18,000/-

  கல்வித்தகுதி:

  12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் 2 வருட டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் icmr அல்லது nirt இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அறிவிப்பில் குறிப்பிட்ட தேதியில் நேரில் சென்று எழுத்துத் தேர்வு / நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய ஆன்லைன் முகவரி : https://main.icmr.nic.in/

  Also Read : தமிழ்நாடு மாவட்ட பொதுச் சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்கள்.

  நேர்காணலுக்குச் செல்ல வேண்டிய முகவரி:

  ICMR-National Institute

  for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road,                    Chetpet, Chennai

  600 031.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

  Published by:Janvi
  First published:

  Tags: Government jobs, Jobs