ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை... முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை... முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகம்

Madras University : சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள உயிர் தொழில்நுட்பத் துறையில் உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள உயிர் தொழில்நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு உயர்கல்வி கவுன்சில் இணைந்து நடத்தும் புதிய திட்டத்தில் பணிபுரிய Project Fellow பதவிக்குத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆர்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 18 மாதங்கள் மட்டும் பணி செய்ய வேண்டும். பணிக்கான தொகுப்பூதியம் வழங்கப்படும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
Project Fellow1ரூ.10,000/-

கல்வித்தகுதி:

Biotechnology/Biochemistry/Botany/Zoology பிரிவில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.

Also Read : பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு.. ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை...!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய படிவத்துடன் கல்வி சான்றிதழ்கள், இதர சான்றிதழ் நகல்களுடன் இணைத்து தபால் மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr.E.Sumathi(Principal Investigator)

Assistant Professor

Department of Biotechnology

University of Madras, Guindy Campus,

Chennai - 600 025, Tamil Nadu,India.

மின்னஞ்சல் முகவரி: drsumathiethiraj@gmail.com

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 18.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Job, Madras University