Home /News /employment /

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்னை? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்தது.

    இவ்வாறு, நிரப்படும் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேவி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது.

    இதனிடையே, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை , தற்காலிகமாக நிரப்புவதற்கு அனுமதி அளித்து 23.06.2022 தேதி பள்ளி கல்வித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    நேற்றைய தினம் இந்த வழக்கு மீதான விசாரணையில் எந்த தகுதியும் நிர்ணயிக்காமல், தேர்வு முறை இல்லாமல், தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்வது ஆபத்தானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், இது குறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

    இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆசிரியர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை? அரசின் இந்த பதில் திருப்திகரமாக இல்லை என்றார்.

    தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது பள்ளி மாணவர்களின் நலனுக்கு உகந்தது அல்ல. தகுதி அடிப்படையில் நியமிக்கவும், முன்னுரிமை அடிப்படையில் நியமிக்கவும் வித்தியாசம் உண்டு. எனவே தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Govt School, HighCourt, School Teacher

    அடுத்த செய்தி