ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் சென்னையில் அரசு வேலை : CUMTA அறிவிப்பு

ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் சென்னையில் அரசு வேலை : CUMTA அறிவிப்பு

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம்

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம்

TN job alert : சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம், தொழில் வல்லுநர்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் ஒப்பந்த அடிப்படையில் தொழில் வல்லுநர்களைப் பணி நியமனம் செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் இப்பணியிடங்களுக்கு இரண்டு ஆண்டுக் கால ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இப்பணிகளுக்கு ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Procurement Expert150ரூ.1.4 லட்சம் - 2 லட்சம்
Mobility and Spatial Data Development Architect145ரூ.1.2 லட்சம் -1.75 லட்சம்
Communication Expert145ரூ.1 லட்சம் - ரூ.1.5 லட்சம்
Environmental Specialist145ரூ.1.4 லட்சம் - ரூ.2 லட்சம்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

பதவியின் பெயர்கல்வி
Procurement Expertbusiness administration பாடத்தில் முதுகலைப்பட்டம் மற்றும் 5 வருட அனுபவம்
Mobility and Spatial Data Development ArchitectBig data/Machine learning/BusinessIntelligence/Data Science/Data Analytics ஆகிய பாடங்களில் இளங்கலை/முதுகலைப் பட்டம் மற்றும் 5 வருட அனுபவம்.
Communication ExpertCommunication, Journalism, Public relations ஆகிய பாடங்களில் இளங்கலை/முதுகலைப் பட்டம் மற்றும் 5 வருட அனுபவம்.
Environmental SpecialistEnvironmental Planning பாடத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் 5 வருட அனுபவம்.

Also Read : ரூ.1 லட்சம் வரை சம்பளம்... பல்கலைக்கழகத்தில் குரூப் பி & சி பணிகள் : விவரங்கள் இதோ..

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் சுய விவரங்கள் கொண்ட படிவம், போர்ட்ஃபோலியோ, கடந்த 3 மாதங்களுக்கான ஊதிய சீட்டு மற்றும் எதிர்பார்க்கும் சம்பளம் போன்ற தகவல்களுடன் cumtaoffice@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 22.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Tamil Nadu Government Jobs